பாரத ஸ்டேட் வங்கி மத்திய பணியமர்த்தம் மற்றும் பதவி உயர்வுத் துறை கார்பொரேட்
மையம், மும்பை தொலைபேசி: 022-22820427 பார்த கியூ ஆர்-ஐ ஸ்கேன் செய்து
விண்ணப்பிக்கவும்
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) எழுத்தர் பிரிவில் இளநிலை
உதவியாளர்களுக்கான (ஜூனியர் அஸோசியேட்) (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை)
பணியமர்த்தம் நிரந்தர அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியில் இளநிலை உதவியாளர்களாக
(வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணியமர்த்தம் பெற தகுதியான இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில்
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான மற்றும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்துவதற்கான
இணைப்புடன், தகுதிவரம்பு (வயது, கல்வித்தகுதி ஆகியவை), தேவையான கட்டணம் மற்றும் பிற
விவரங்கள், விண்ணப்ப எண். CRPD/CR/2024-25/24-ன் கீழ், https://bank.sbi/web/careers/current_openings என்ற வங்கி வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முன்னரும், கட்டணத்தை செலுத்தும் முன்னரும் விரிவான விளம்பரத்தை
படித்து தங்கள் தகுதி மற்றும் பிற விவரங்களை உறுதி செய்து கொள்ளுமாறு
விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய
மற்றும் கட்டணம் செலுத்தவேண்டிய தேதி: 17.12.2024-லிருந்து 07.01.2025 வரை. ஏதேனும்
சந்தேகங்களுக்கு, வங்கியின் வலைதளத்திலுள்ள "CONTACT US" -> "Post Your Query" என்ற
இணைப்பின் மூலம் எங்களுக்கு எழுதவும்
https://bank.sbi/web/careers/current_openings. இடம்: மும்பை தேதி: 17.12.2024
பொது மேலாளர் (ஆர்பி மற்றும் பிஎம்)
No comments:
Post a Comment