SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - DGE செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 27 December 2024

SSLC பொதுத்தேர்வு பெயர்ப்பட்டியலில் மாணவர்களின் பெயரை சேர்த்தல் / நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு - DGE செயல்முறைகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - பத்தாம் பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2025 வகுப்பு பெயர்ப்பட்டியல் - சேர்த்தல் / நீக்கம் - கூகுள் படிவம் (Google Sheet) பூர்த்தி செய்தல் - தொடர்பாக 

பார்வையில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதங்களில், 2024- 2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் GR எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 13.11.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யுமாறும், அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை 15.11.2024 முதல் வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. 22.11.2024 மேலும், திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மார்ச்/ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை 24.12.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரையினை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, மார்ச்/ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலில் விடுபட்டுள்ள மாணவர்களைச் சேர்த்திடவும் (Addition), இறப்பு (Death) / மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கம் (Deletion) செய்திடவும் இத்துடன் இணைத்தனுப்பப்படும் கூகுள் படிவத்தினை (Google Sheet) 02.01.2025-க்குள் பூர்த்தி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ..2... மேலும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் பெயர்களை மட்டும் பெயர்ப்பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடும் பட்டியலில் பதிவு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

நீண்டநாள் விடுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களின் உரிய பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நீக்கம் செய்திட கோரவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே, பெயர்பட்டியலில் நீக்கம் கோரி இவ்வலுவலகத்திற்கு கடிதங்கள் அனுப்பி இருப்பினும் தற்போது, தேர்வெண்ணுடன் அம்மாணவர்களின் விவரங்களையும் கூகுள் படிவத்தில் (Google Sheet) தவறாமல் பூர்த்தி செய்திடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஓம்/- இயக்குநர் நகல்: 1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 



No comments:

Post a Comment