இன்று (02.01.2025) பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 2 يناير 2025

இன்று (02.01.2025) பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

இன்று (02.01.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை, அறிவிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் திருமதி சோ. மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வுவாரியத் தலைவர் திருமதி பி. ஸ்ரீவெங்கடப்பிரியா, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் திருமதி மா. ஆர்த்தி, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளர் திருமதி ச. ஜெயந்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர்செயலர் திரு.இரா. சுதன், இ.ஆ.ப. (ப.நி.), தனியார்பள்ளி இயக்குநர் திரு. மு. பழனிச்சாமி, தொடக்கக் கல்வி இயக்குநர் திரு. பூ.அ. நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திருமதி த. உமா, அரசு தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் திருமதி ந. லதா, பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


ليست هناك تعليقات:

إرسال تعليق