பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து குறள் எண்:945 மாறுபாடு இல்லாத
உண்டி மறுத்துஉண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. பொருள்: உடலுக்கு ஒத்துக்கொள்ளும்
உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் ஏதுமில்லை.
பழமொழி : அதிகம் கேள்,
குறைவாகப் பேசு Hear more, but talk less
இரண்டொழுக்க பண்புகள் :
எண்ணும்
எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச்
செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி : எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை,வரலாறாய் ஆனவர்கள் தனக்காக
வாழ்ந்ததில்லை---காமராஜர்
பொது அறிவு :
1. உலக பரப்பளவில் இந்தியா எத்தனையாவது
நாடாகும்? விடை: ஏழாவது.
2. அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிக்கை முதன்முதலில்
எந்த ஆண்டு வெளிவந்தது? விடை: 1947
English words & meanings : Cycling. -
மிதிவண்டி Football - கால்பந்து வேளாண்மையும் வாழ்வும் : மிஞ்சியுள்ள உறையாத
சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய
பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.
நீதிக்கதை பூனையும் நரியும்
ஒரு
மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன.
“இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அவர்களை பிடிக்காது”, என்று நரி
சொல்லியது . “ஆமா ஆமா அவர்களை எனக்கும் சுத்தமா பிடிக்காது” என்று பூனையும்
சொன்னது. “ அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவர்களால் என்னை
பிடிக்க முடியாது.ஏனென்றால் , அவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள்
தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்”,
என்று அந்தப் பூனை கேட்டது. அதற்கு நரிசொல்லியது , "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு.
நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து
விடுவேன்”. என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.
“நிஜமாகவா”? என்று அந்தப் பூனை கேட்டது . அதற்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதில்
ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி
புத்திசாலிங்க செய்யக் கூடியது” என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது.
அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு
நரியும் பூனையும் பேசிக் கொண்டிருக்கும் போது வேட்டை நாய்கள் ஓடி வரும் சத்தம்
கேட்டது. உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாற்றி கொள்ள
போகிறேன்” என்று கூறி விட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறியது. அதன்பின் “நீ
எப்படி உன்னை காப்பாற்றி கொள்ள போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என்று அந்த
நரியிடம் பூனை சொன்னது. அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தியும்
நரியால் அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. நீதி : தேவையில்லாத
பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே
நல்லது.
இன்றைய செய்திகள் 07.01.2025
உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும்
நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சிந்துவெளி
பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது
அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக
வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஆசியாவின் மிகப் பெரிய
15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில்
பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால்
இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி
வெற்றி.
மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
அறிவிப்பு. Today's Headlines
Avalanche recorded a minus 1 degree Celsius
temperature as Ooty was gripped by a freezing cold.
Chief Minister M.K. Stalin
has announced that an individual or organization will be awarded one million US
dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley
Civilization script.
Asia's 15th largest air show - Aero India 2025 - will be
held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has
said.
China has said that the world's largest dam to be built across the
Brahmaputra river will not affect India and Bangladesh.
Hockey India League:
Tamil Nadu Dragons defeat UP Rudras.
Women's Cricket: India's team announced
for the ODI series against Ireland.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment