பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி | முதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 January 2025

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி | முதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் பருவநிலை மாற்ற மாநாடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சின்னம் வடிவமைக்கும் போட்டி | முதல் பரிசாக ரூ.1 லட்சம் அறிவிப்பு 
சென்னை தமிழக அரசு நடத்தவுள்ள பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவ மைப்பு போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவநிலை மாற்றம் தொடர் பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை சார்பில் பருவநிலை மாற்றம் மாநாடு 3.0 வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ளது. பருவநிலை மாற்றம் தொடர் பான விழிப்புணர்வு பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த மாநாடு தொடர் பான சின்னம் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட உள்ளது. 
இதில் பள்ளி, கல்லூரி மாணவர் களும், இளைஞர்களும் பங்கேற் கலாம். பருவநிலை மாற்ற பிரச்சி னைக்கு தீர்வு காண்பதில் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பங்கேற்கும் வகை யில் இளைஞர்கள்தங்கள்படைப் பாற்றலை வெளிப்படுத்த இந்த போட்டி ஒரு தளமாக அமையும். மாணவர்கள் வடிவமைக் கும் சின்னம், சுற்றுச்சூழல் நீடித்த வளர்ச்சி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை எடுத்துக்காட்டு வதாக அமைந்திருக்க வேண் டும். சிறந்த சின்னத்தை வடிவ மைப்போருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங் கப்படும். இப்போட்டியில் பங் கேற்கும் மாணவர்களும் இளை ஞர்களும் தங்கள் படைப்புகளை கியூஆர் கோடு வாயிலாகவோ mascotccm@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ ஜன். 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும். இதற்கான கியூஆர் கோடு https://tnclimatechangemission.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, இயக்குநர், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, 1, ஜீனியஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை 600015 (தொலைபேசி எண் 044- 24336421) என்ற முகவரி யில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment