பணி நிறுவனம்: கோல் இந்தியா லிமிடெட் காலி இடங்கள்: 434 பதவி: மேனேஜ்மெண்ட்
டிரெய்னி கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., எம்.பி.ஏ.,
சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முதுகலைப் பட்டபடிப்பு. பணி
அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி 30 வயது. அரசு
விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10
ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை:
கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-2-2025 இணையதள முகவரி:
https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/mt-recruitment-cbt-2025/
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு
பணி நிறுவனம்: பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் (பி.ஆர்.ஓ.) காலி இடங்கள்: 411 பதவி:
பல்துறை திறன் பணியாளர்கள் (எம்.எஸ்.டபிள்யூ - சமையலர், மேசன், பிளாக்ஸ்மித், மெஸ்
வெயிட்டர்) கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட
துறை சார்ந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது: 25-2-2025 அன்றைய
தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-2-2025 இணையதள முகவரி:
https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO
பெல் நிறுவனத்தில் வேலை
பணி நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) காலி பணி இடங்கள்: 350 பதவி:
புரொபஷனரி என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்) பணி இடம்: சென்னை
(தமிழ்நாடு), பெங்களூரு (கர்நாடகா), காசியாபாத் (உ.பி.), ஐதராபாத் (தெலுங்கானா),
பஞ்ச்குலா (அரியானா), புனே (மராட்டியம்), மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்),
கோட்வாரா (உத்தரகாண்ட்) மற்றும் நவி மும்பை (மராட்டியம்) கல்வி தகுதி: பி.இ.,
பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 25
வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள்
வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது
தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு,
நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம்,
திருச்சி, திருநெல்வேலி, வேலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025
இணையதள
முகவரி: https://bel-india.in/job-notifications/
டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி
பணி நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) காலி
இடங்கள்: 234 பதவி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (மெக்கானிக்கல் என்ஜினீயர்,
எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயர், கெமிக்கல் என்ஜினீயர்)
ஒரு சில பதவிகளுக்கு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்திருக்கவேண்டும். வயது: 18 முதல்
25 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: கம்ப்யூட்டர்
அடிப்படையிலான தேர்வு, குழு விவாதம், திறனறி தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி
தேதி: 14-2-2025 இணையதள முகவரி: https://www.hindustanpetroleum.com/job-openings
ليست هناك تعليقات:
إرسال تعليق