ஆணை:-
தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை
கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025
ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும், மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை
மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை)
அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை
அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன்
பரிசீலித்து, பொங்கல் பண்டிகைக்கு மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள்
மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும்
வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு
அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி
நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்,
25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.
3.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம். 1881 (Under Negotiable
Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை
மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள்.
சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த
ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். (ஆளுநரின் ஆணைப்படி) ரீட்டா ஹரிஷ் தக்கர் அரசு செயலாளர்
பெறுநர்
அனைத்துத் துறை செயலாளர்கள், தலைமைச் செயலகம், சென்னை-9. அனைத்து மாவட்ட
ஆட்சித் தலைவர்கள். அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள். முதலமைச்சர் அலுவலகம்,
தலைமைச் செயலகம், சென்னை-9. தனி அலுவலர். முதலமைச்சரின் தனிப்பிரிவு, சென்னை-9,
இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9. நகல் உதிரி/இருப்பு
கோப்பு. //ஆணைப்படி / அனுப்பப்படுகிறது// இ:ைசொர் 04/01/2025 பிரிவு அலுவலர்
04/01/25
No comments:
Post a Comment