ஜனவரி 25-இல் ‘சிமேட்' தேர்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு! - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 22 يناير 2025

ஜனவரி 25-இல் ‘சிமேட்' தேர்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு!

ஜன. 25-இல் ‘சிமேட்' தேர்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு 
மேலாண்மை படிப்பு களில் சேர்வதற்கான 'சிமேட்' நுழைவுத் தேர்வு ஜன.25-ஆம் தேதி நடைபெற வுள்ள நிலையில், அதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய உயர்கல்வி நிறு வனங்கள் மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழுமத்தின் கீழ் (ஏஐசிடிஇ) இயங்கும் கல்லூரிகளில் மேலாண்மை படிப்புகளில் சேர 'சிமேட்' எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிபெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி நிகழாண்டு 'சிமேட்' தேர்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பரில் நடைபெற்றது. நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள் ளனர். இந்நிலையில், தேர்வெழுத தகுதி பெற்றவர்களுக்கான தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு தற்போது வெளியிடப்பட் டுள்ளது. அவற்றை தேர்வர்கள் 
https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத் தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். இந்தத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கான பாடத் திட்டம் உள்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத் தில் இருந்து அறியலாம். ஏதேனும் சந் தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.a c.in என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர் புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق