தேசிய வாக்காளர் தினம்
திருக்குறள்:
பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை குறள் எண்:955 வழங்குவது உள்விழ்ந்தக் கண்ணும்
பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.
பொருள்:
கொடுப்பதற்கு செல்வம் வற்றிய காலத்தும் நற்குடியில் பிறந்த பழங்குடி மக்கள்
கொடைத்தன்மையை விடார்.
பழமொழி :
The bearer knows the burden. சுமப்பவனுக்கு தெரியும் பாரம்.
இரண்டொழுக்க பண்புகள் :
உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது
தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.
விளையாட்டு
உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு
விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன். பொன்மொழி : கல்வியின் வேர்களோ
கசப்பானவை, ஆனால் கனியோ இனிப்பானது-- அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. பறவை தீவு என அழைக்கப்படுவது எது? விடை: நியூசிலாந்து.
2. முதுகெலும்புடன்
தோன்றிய முதல் உயிரினம் எது? விடை :மீன்
English words & meanings :
Air - காற்று Bay - விரிகுடா ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம் இந்திய அரசாங்கத்தால்
இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக
சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக
(National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள்
கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின்
நோக்கமாகும். 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி
வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம்,
இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள்
அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள
அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.
நீதிக்கதை மகிழ்ச்சியான பணி
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும்
அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள்
செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப்
போகிறது?" என்று கேட்டான். குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை..
நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக்கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய
வேண்டியிருக்கிறது. உன்னைப் போலவெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது?
அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான். அதற்கு வைர வியாபாரி சொன்னான்
"உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று
எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப்படுத்திக் கொள்கிறேன் தெரியுமா
உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே.
வேலை செய்து கையெல்லாம்
புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து
என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன்
கைகளைக் காட்டினான். எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா?
மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும்
பிடிபடவில்லை. ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர்
ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும்
ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது
இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள். பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள்
இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.
அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில்
கூறினார்கள்.
"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால்
என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார். "எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல்
போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள். "அப்படியானால், உலகில் குறைகள்
இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறைவு
செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். நீங்கள் அதைப்
பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள்.
மகிழ்ச்சியும்மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில்
இல்லை" என்று முடித்தார்.
இன்றைய செய்திகள் 25.01.2025
குடியரசு தின விழா:
சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை.
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட்
போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
இன்றும் நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கை 100 கோடியை
நெருங்கியது. மத்திய தேர்தல் ஆணையம் தகவல்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன்
தொலைபேசியில் பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசு
தெரிவித்துள்ளது.
ஹாக்கி இந்தியா லீக்: ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு
டிராகன்ஸ் வெற்றி.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இத்தாலி வீரர் ஜானிக் சினெர்
இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
Republic Day: Drones banned in Chennai for 2 days
For the convenience of the
spectators coming to watch the India-England cricket match, the metro train
service in Chennai will also be extended today.
The number of voters in India
is nearing 100 crores. Central Election Commission Information.
Russian
President Vladimir Putin is ready to talk to US President Donald Trump on the
phone, the country's government has said.
Hockey India League: Tamil Nadu
Dragons beat Hyderabad.
Australian Open Tennis: Italian Janic Ciner advances
to final
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment