பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 26/01/2025 - EDUNTZ

Latest

Search Here!

Sunday, 26 January 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 26/01/2025

திருக்குறள்: 

பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : துறவு குறள்:342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. 

விளக்கம்: 

 பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்ள வேண்டும். பழமொழி : சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை . இரண்டொழுக்க பண்புகள் : *உலகில் தோன்றிய மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்பதை அறிவேன். எனவே , எனது தாய் மொழியை சிறப்பாக கற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். *விளையாட்டு உடலுக்கு வலிமை சேர்க்கும் .எனவே, செல்பேசியில் மூழ்காமல் ஏதாவது ஒரு விளையாட்டிலாவது எனது திறமையை வெளிப்படுத்துவேன். பொன்மொழி : அன்பு தான் உன் பலவீனம் என்றால் இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி நீ தான் - அன்னை தெரசா 

பொது அறிவு : 1. உலகில் அதிக விலை கொண்ட விலங்கு எது? விடை: பந்தய குதிரை 

English words & meanings : Beach. - கடற்கரை Bridge. - பாலம் 

ஜனவரி 26 இந்தியக் குடியரசு நாள் 

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர் "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்." 

12ஆம் நாள் டிசம்பர் மாதம் 1946 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியலமைப்பு சட்டவரைவை மக்களவையில் சமர்ப்பித்தது. 

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் எழுதி முடிக்கப்பட்டது.பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. 

அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில் சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது 

 இன்றைய செய்திகள் 26.01.2025 

🌸நமது இந்திய திருநாட்டில் 76 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

🌸93 ஆயுதப்படை வீரர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று வீரதீர விருதுகள் வழங்குகிறார். 

🌸தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல். 

🌸சர்வதேச T20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். 

 Today's Headlines 

🌸 The 76th Republic Day is celebrated today in our country. 

🌸President Draupadi Murmu presents the Veerathira awards today to the 93 Armed Forces. 

🌸The weather forecast for two days in Tamil Nadu and Puducherry Center information. 

🌸Arshdeep Singh holds the record for the highest wicket -taker for India in T20 cricket. 

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment