அனுப்புநர்
பா.பொன்னையா, இ.ஆ.ப., ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம்,
பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை -15.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர்,
அனைத்து மாவட்டங்கள்
அய்யா/அம்மையீர், -
கிராம சபைக்
பொருள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூட்டம் - 26.01.2025
குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல், கூட்டப் பொருள்கள் அனுப்பி வைத்தல் - தொடர்பாக.
பார்வை -
1. அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி1)
துறை. நாள் 19.11.1998
2. அரசாணை (நிலை) எண்:130. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
(சி4) துறை, நாள் 25.09.2006.
3. அரசாணை (நிலை) எண்.65, ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித் (ப.ரா.2) துறை, நாள் 24.5.2022.
பார்வை 1ல் கண்டுள்ள அரசாணைப்படி, குடியரசு
தினத்தன்று (26.01.2025) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்
நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட
வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று 26.01.2025 காலை 11.00
மணி அளவில் நடத்த வேண்டும்.
பார்வை 2-ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு
குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக்
கூட்டம் நடத்தப்பட வேண்டும். பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ள
பொருள்களுடன் 26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு எடுத்துக்
கொள்ள வேண்டிய பொருட்கள் விபரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தங்கள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும்
ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக்
கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த
வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக்
கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு
தெரியப்படுத்திட வேண்டும். இடத்தை மேலும்,26.01.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக்
கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும். கூட்ட
நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி "Namma Grama Sabhal Mobile App" மூலம் உள்ளீடு
செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை 26.01.2025 அன்றே
இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு:
கிராம
சபைக் கூட்டப் பொருள்கள். ஒம்/- பா.பொன்னையா ஆணையர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி
ஆணையருக்காக நகல் -
1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 09.
2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு
மகளிர் மேம்பாட்டு நிறுவனம். சென்னை-34.
3. கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அனைத்து மாவட்டங்கள்.
4. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்),
அனைத்து மாவட்டங்கள் (தக்க நடவடிக்கைக்காக).
No comments:
Post a Comment