லாலா லஜபதி ராய்
திருக்குறள்
பால் : பொருட்பால் அதிகாரம் குடிமை குறள் எண்:957 குடிப்பிறந்தார் கண்விளங்கும்
குற்றம் விசும்பின் மதிக்கண மறுப்போல் உயர்ந்து. பொருள்: விண்நிலவு களங்கம் போல்,
உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.
பழமொழி :
செய்வன திருந்தச் செய். Do well what you have to do.
இரண்டொழுக்க பண்புகள் :
எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். எனது பெற்றோரும்
ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன். பொன்மொழி : வசந்தம் ஒரே
நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும்--அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது? விடை: நெருஞ்சிப் பழம். 2.
திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________ விடை: அனிச்சம் , குவளை
English words & meanings :
Dam. - அணை Desert. - பாலைவனம்
வேளாண்மையும் வாழ்வும் :
பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம்
உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்:
அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.
ஜனவரி 28 லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்
லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப்
போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள்
பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று
முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும்
பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி
காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்
நீதிக்கதை கிணற்றைத்தானே விற்றேன்
ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள்
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். அப்போது விற்றவன்
அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர்
எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான். விற்றவன் "ஐயா!
உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று
தர்க்கம் செய்தான். விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று
முறையிட்டான். நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும்
விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது
உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான்
தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும்
கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே
வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார். விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது
தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும்
அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
இன்றைய செய்திகள் 28.01.2025
தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில்
அகற்ற ஐகோர்ட் உத்தரவு.
திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில்
22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.
தேசிய
நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால்
உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உத்தராகண்ட்
மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்க முன்னாள்
அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க
அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா
வாரியர்ஸ் சாம்பியன்.
பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட்
ஹரிகேன்ஸ் சாம்பியன்.
Today's Headlines
Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7
months, a great achievement in record time in the school education department.
Court order to remove party flag poles from public places and roads in Tamil
Nadu within 12 weeks. Roadside barriers made of bamboo cuttings are being
erected on national highways to avoid casualties during accidents.
The General
Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.
President Donald Trump ordered to lift the embargo on the supply of explosives
to Israel by Former US President Joe Biden
Women's Hockey India League: Odisha
Warriors are champions.
Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder
to become champions.
Covai women ICT_போதிமரம்
ليست هناك تعليقات:
إرسال تعليق