அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடு அடிப்படையில் முதுகலை ஆசிரியராக பணி
வழங்கப்படும் நடைமுறையில் விதித்திருத்தம் செய்யப்பட்ட விவரம் - பள்ளிக் கல்வி
இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்
பணி சிறப்பு விதிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 50% பதவிஉயர்வுக்கும்
50% நேரடி நியமனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விதி 2(b)(I) ன்படி கண்காணிப்பாளர்,
உதவியாளர், இளநிலை உதவியாளர்/தட்டச்சர் பதவிகளில் இருந்து முதுகலை ஆசிரியராக
பணிமாறுதல் மூலம் (Recruitment by transfer) செல்வதற்கு பதவி உயர்வுக்கு என
ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 சதவிகித காலிப்பணியிடங்களில் இருந்து 2 சதவிகித
பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்காணும் 2% ஒதுக்கீட்டினை நேரடி
நியமனத்திற்கென ஒதுக்கப்பட்ட 50% பணியிடங்களுள் 10% உள் ஒதுக்கீடு ஏற்கனவே
பணியாற்றும் இடைநிலை/ சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதிலிருந்து 8% ஆக
குறைத்தும் எஞ்சிய 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு
மேல் நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளில் Re-issue வெளியிடப்பட்ட அரசு ஆணை நிலை
எண்.14 பள்ளிக்கல்வித் துறை நாள் 30.01.2020ல் விதி 2(b)(i)க்கு பார்வை 5 ன்படி
விதித்திருத்தம் பெறப்பட்டுள்ள அரசு ஆணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
No comments:
Post a Comment