சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரமேஷ்
தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவது குறித்து அரசு 2001-ம் ஆண்டு முடிவு எடுத்து, 2003-ம் ஆண்டு தேர்வு
நடத்தியது.
இதில் தேர்ச்சி பெற்று தெலுங்கு மொழி ஆசிரியராக 21-8-2003 அன்று
நியமிக்கப்பட்டேன். இதற்கிடையில், தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003
அன்று முதல், அதாவது முன்தேதியிட்டு ரத்து செய்து அதே ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி
அரசாணை பிறப்பித்தது. இதனால், என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது.
ஆனால், இந்த அராசணை பிறப்பிப்பதற்கு முன்பே தேர்வு நடவடிக்கை தொடங்கி விட்டதால்,
என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தும் அரசு
பரிசீலிக்கவில்லை'' என்று கூறியிருந்தார்.
இதேபோல, சிறுபான்மை மொழி ஆசிரியர்கள்
யுவகுமார், தேவராஜூலு ஆகியோரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு
நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில்
வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, “இதுபோன்ற
ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்கவேண்டும் என்று கடந்த
2023-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி
மனுதாரர்களின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 2 வாரத்துக்குள் தகுந்த முடிவை அரசு
எடுக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment