பி.எச்டி. பட்டங்கள் வழங்க 3 பல்கலைக்கழகங்களுக்கு தடை - EDUNTZ

Latest

Search Here!

الجمعة، 17 يناير 2025

பி.எச்டி. பட்டங்கள் வழங்க 3 பல்கலைக்கழகங்களுக்கு தடை

ராஜஸ்தான் மாநிலம் சுருவில் உள்ள ஓ.பி.ஜே.எஸ். பல்கலைக்கழகம், ஆல்வாரில் உள்ள சன்ரைஸ் பல்கலைக்கழகம், ஜுன்ஜுனுவில் உள்ள சிங்கானியா பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பி.எச்டி. பட்டங்கள் வழங்க பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தடை விதித்துள்ளது. 
இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோசி கூறுகையில், ‘இந்த 3 பல்கலைக்கழகங்களும் பி.எச்டி தொடர்பான யு.ஜி.சி.யின் விதிமுறைகள் மற்றும் கல்வி விதிமுறைகளை பின்பற்றாததை யு.ஜி.சி.யின் நிலைக்குழு கண்டுபிடித்து உள்ளது. 
மேலும் இந்த பட்டத்தின் கண்ணியத்தில் சமரசம் செய்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே இந்த பல்கலைக்கழங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பி.எச்டி மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது’ என தெரிவித்தார். இந்த பல்கலைக்கழகங்களின் பி.எச்டி பட்டங்கள் மேல்படிப்புக்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ அங்கீரிக்கப்பட்டதாக இருக்காது என்பதால் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق