47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

الاثنين، 27 يناير 2025

47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் - 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post), 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் ஆணை வெளியிடப்படுகிறது. 

10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. 2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில். மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்து ஆராய பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர். அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 3. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தின்படி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் 09.02.2024 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி Iஇயக்ககத்தின் கீழ் செயல்படும் தற்காலிகப் பணியிடங்கள் சார்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ليست هناك تعليقات:

إرسال تعليق