8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்புக்கட்டணம் - நிதி இழப்பு அரசால் ஈடு செய்யப்பட்டமை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 3 January 2025

8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்புக்கட்டணம் - நிதி இழப்பு அரசால் ஈடு செய்யப்பட்டமை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 61155/ஜி2/இ3/2007 நாள். 18.12.2008 

பொருள்:

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்புக்கட்டணம் 2008- 09ம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டமையால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பு அரசால் ஈடு செய்யப்பட்டமை - சிறப்புக் கட்டண நிதியில் செலவினம் மேற்கொள்ளுதல் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கு கூடுதல் நிதி அதிகாரம் அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளமை - சார்பாக.

பார்வை: 

 1. அரசாணை (நிலை) எண். 110/பள்ளிக் கல்வி (இ1) துறை / நாள். 29.5.08 
2. அரசுக் கடிதம் எண். 9377/இ1/2008-2 நாள். 29.5.08 
3. அரசாணை (நிலை) எண். 218/பள்ளிக் கல்வி (இ1) துறை/நாள். 8.11.08 
4. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ந.க.எண். 61155/2/13/2007 s. 13.11.2008 19.11.2008 
5. அரசாணை (நிலை) எண். 246/பள்ளிக் கல்வி (இ) துறை/நாள். 8.12.2008. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் . அரசுநிதி உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றம் ஆங்கில வழியில் பயிலும் மாணல/மாலாவியர்கள் சிறப்புக்கட்டணம் செலுத்துவதை 2008-2009ம் கல்வி ஆண்டு முதல் ரத்து செய்து பார்வை-1ல் காணும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு/அரசு உதவிபெறும் உயர்நிலை, மேனிலைப்பள்ளிகள் மற்றும் நலத்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகள் சிறப்புக்கட்டணம் ரத்து செய்யப்படுவதால் ஏற்படும் நிதி இழப்பின் விவரம் அரசால் ஆகியவற்றில் மேற்கண்ட கோரப்பட்டதன் பேரில், அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு பார்வை 3ல் காணும் அரசாணையின் மூலமாக அரசு/அரசு நிதி உதவி பெறும் உயர்/மேனிலைப்பள்ளிகளுக்கு சிறப்புக்கட்டண இழப்பீடு தொகையாக ரூ.21.40 கோடி அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிதியினை முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்படி பார்வை-4ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின்படி பகிர்ந்தளிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு/அரசு நிதி உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது வசூலிக்கப்படும் சிறப்புக்கட்டணம் 14 வகையான இனங்களின் கீழ் பிரித்து கணக்குகள் கையாளப்பட்டு வருகிறது. 

இவற்றுள் சேர்க்கைக் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதர 13 கணக்குகாக தலைமை ஆசிரியர்களால் கையாளப்பட்டு வருகிறது. இத்தகைய வகையான இனங்கள் தனித்தனி முறையில் பள்ளி கணக்குகள் கையாளப்படுவதில் உள்ள இடர்பாடுகளை களையும் வகையிலும், இருப்பில் உள்ள பயன்படுத்திடும் வகையிலும் பார்வை -5ல் காணும் அரசாணையில் தெரிவித்துள்ளபடி முன்குவிப்பு நிதியினை பள்ளி வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிகள் கார்நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதுவரை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் தொடர்பாக சேர்க்கைக் கட்டணம் உள்ளிட்டு 14 இனங்களாக கையாளப்பட்டு வந்த சிறப்புக்கட்டணம் கணக்குகள் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. அவற்றுக்கு பதிலாக அரசால் வழங்கப்படும் நிதி " பொது நிதி (General Fund) என்ற ஒரே கணக்குத் தலைட்பின் கீழ் பராமரிக்கப்பட வேண்டும். இந்நிதியிலிருந்து 1. 

2. சாரண சாரணிய கட்டணம் செஞ்சிலுவை சங்க கட்டணம் 3. மருத்துவ ஆய்வு கட்டணம் 'ஆகிய மூன்று இனங்கள் மட்டும் தற்போதுள்ள நடைமுறைப்படி தனிக்கணக்காக பராமரிக்கப்பட வேண்டும். ஏனைய இனங்கள் அனைத்தும் ஒரே இனமாக " பொது நிதி " தலைப்பில் பராமரிக்கப்பட வேண்டும். 

ஆ) ' பொது நிதி ' என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட உள்ள நிதி சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியரால், நிதி அதிகாரத்திற்குட்பட்டு பள்ளி வார்ச்சிக்குத் தேவையான, பணிகளுக்காக செலவு மேற்கொள்ளவும் வரவு-செலவு கணக்குகள் சரியான முறையில் பராமரித்து ஆய்வு அலுவலரின் ஆய்வு, துறைக்கணக்குத்தணிக்கை மற்றும் மாநில கணக்காயர் தணிக்கை ஆகியவற்றின்போது உரிய ஆவணங்கள் ஆய்வுக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். 

இ) ஏற்கனவே பள்ளிகளில் இருக்கும் நிதியானது குவிப்பில் உள்ள தொகை மற்றும் நடப்பு ஆண்டில் உள்ள வசூல் தொகை என இரு வகையில் கையாளப்படுவதை ரத்து செய்து குவிப்புநிதி நடப்பு நிதியாண்டு அரசு ஒதுக்கீடு நிதி என இருவகை நிதியையும் வகைப்பாடு இல்லாமல் பள்ளிகளின் அவசிய செலவினங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இதன்மூலம் அதிகாரம் வழங்கப்படுகிறது.

 ஈ} பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் செலவினம் மேற்கொள்ள ஒவ்வொரு பள்ளியிலும், பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்குழுவின் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான தொகை சார்ந்து திட்டமிட்டு மதிப்பீடு தயாரித்து செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கண்ட பள்ளிக்குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட வேண்டும். te மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர் மூத்த முதுகலை ஆசிரியர் (அறிவியல்) 1. 2 3. மூத்த முதுகலை ஆசிரியர் மொழி/கலை 4. மூத்த உடற்கல்வி ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர் 5. மூத்த பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்/கலை) 

6. மூத்த பட்டதாரி தமிழாசிரியர் ஆ. 7. மூத்த இடைநிலை ஆசிரியர் உயர்நிலைப்பள்ளிகள் 1. தலைமை ஆசிரியர் 2. 3. 4. 5. மூத்தபட்டதாரி ஆசிரியர் (அறிவியல்} மூத்த பட்டதாரி ஆசிரியர் (மொழி/கலை) மூத்த உடற்கல்வி ஆசிரியர் மூத்த இடைநிலை ஆசிரியர்  2. தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் சிறப்புக்கட்டணம் செலவிடப்படும் நிதி அதிகாரம் உயர்நிலைப்பள்ளி எனில் ரூ 7500/-ம் மேல்நிலைப்பள்ளி எனில் ரூ.10,000/-ம் வரை செலவினம் மேற்கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை இரத்து செய்யப்பட்டு பள்ளிகளில் மின் இணைப்பு பழுதுபார்த்தல் மற்றும் மின்கட்டணம் செலுத்துதல் குடிநீர் வசதி செய்தல் கழிப்பறை பராமரிப்பு பணிகள் தளவாடங்கள் பழுதுபார்த்தல் பள்ளி வளாகம் சீர்செய்து பராமரித்தல் விழா செலவினங்கள் வகுப்பறைகள் பராமரிப்பு போன்ற பராமரிப்பு பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள கார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், சார்நிலை அலுவலர்களுக்கும் கீழ்க்கண்டவாறு நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

1. பள்ளித் தலைமை ஆசிரியர் குழு 2. மாவட்டக் கல்வி அலுவலர் 3. முதன்மைக் கல்வி அலுவலர் ரூ.50,000/- வரை ரூ.50,001 முதல் 75,000/- வரை ரூ 75,001 முதல் ரூ 1,00,000/- வரை ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு கருத்துருக்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி கோரி அனுப்பப்பட வேண்டும். திருத்தியமைக்கப்பட்ட கட்டணவகை இனங்கள் குறித்து " பொதுநிதியில் " செலவினங்கள் மேற்கொள்ளும்பொழுது சார்ந்த தலைமை ஆசிரியர் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்பட வேண்டும் எனவும் அரசால் அனுமதிக்கப்படும் நிதி பள்ளி வார்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதை சார்நிலை அலுவலர்கள் ஆய்வின் போது உறுதி செய்துகொள்ள --வேண்டும் எனவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. திருத்தியமைக்கப்பட்ட பொதுநிதி மற்றும் செலவிடும் அதிகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரிவான சுற்றறிக்கையினை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பிடுமாறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தக்க அறிவுரைகளை வழங்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இச்செயல்முறைகள் பெற்றமைக்கு ஒப்புதலினை அனுப்பி வைக்கும்படியும் அறிவிக்கப்படுகிறது. 




No comments:

Post a Comment