மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு (முழு விவரம்) - EDUNTZ

Latest

Search Here!

Friday, 17 January 2025

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு (முழு விவரம்)

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு அமைக்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். 
8-வது ஊதியக்குழு 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் 8-வது ஊதியக்குழுவை அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசும்போது, “அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக 8-வது மத்திய ஊதியக்குழுவை அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்து உள்ளார். 1947-ம் ஆண்டு முதல் 7 ஊதியக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. 7-வது ஊதியக்குழு 2016-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் காலம் அடுத்த ஆண்டு (2026) முடிவடைகிறது. 8-வது ஊதியக்குழுவை 2025-ல் அமைக்க முடிவு செய்வதன் மூலம், அதற்கான பரிந்துரைகளை தாராள அவகாசத்தில் பெற முடியும். இந்த செயல்முறையானது மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைகளை பெறுதல் உள்ளிட்டவற்றை கொண்டது. ஊதியக்குழுவுக்கு ஒரு தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்’’ என்று கூறினார். 
ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள் 8-வது ஊதியக்குழு மூலமாக உள்துறை உள்ளிட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதற்குமுன்பு, 7-வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட 2016-2017-ம் நிதி ஆண்டு முதல் ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகி வருவதாக கூறப்படுகிறது. 

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் 

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ நிறுவனத்தின், முதன்மை ராக்கெட் ஏவுதளமாக ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் விளங்கி வருகிறது. இங்கு 2 ஏவுதளங்கள் உள்ளன. முதல் ஏவுதளம் 30 ஆண்டுகளுக்கு முன்பு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளுக்காக நிறுவப்பட்டது. இருந்தாலும் எஸ்.எஸ்.எல்.வி.க்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. 2-வது ஏவுதளம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் எல்.வி.எம்-3 க்காக நிறுவப்பட்டது. மேலும் பி.எஸ்.எல்.வி.க்கான காத்திருப்பு தளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, சந்திரயான் மிஷன், பி.எஸ்.எல்.வி. மற்றும் எல்.வி.எம்.3-ன் வணிகம் தொடர்பான பணிகளுக்கும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ககன்யான் பணிகளுக்காகவும் தயாராகி வருகிறது. இது 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 
அடுத்த தலைமுறைக்காக… இந்த தளங்கள் எதிர்கால தேவைகளுக்கு குறிப்பாக 2035-ம் ஆண்டு நிறுவப்பட உள்ள பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படவுள்ள சந்திர தரையிறக்கம் போன்றவற்றுக்கு போதுமானதாக இருக்காது. அவற்றுக்கு புதிய உந்துவிசை அமைப்புகளுடன் கூடிய அடுத்த தலைமுறை கனரக ஏவுதல் வாகனங்களை (என்.ஜி.எல்.வி.) பயன்படுத்தும் ஏவுதளங்கள் வேண்டும். அதனை நிறுவ வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில் 3-வது ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தற்போது உள்ள 2-வது ஏவுதளத்துக்கான காத்திருப்பு ஏவுதளமாக இதனை பயன்படுத்தவும் நோக்கம் உள்ளது. 

ரூ.4 ஆயிரம் கோடி 3-வது ஏவுதளம் என்.ஜி.எல்.வி.க்கு மட்டுமின்றி, செமி கிரயோஜெனிக் நிலை மற்றும் என்.ஜி.எல்.வி. இன் அளவுகோல் உள்ளமைவுகளுடன் கூடிய எல்.வி.எம்.3 வாகனங்களையும் ஆதரிக்கும் வகையில் உலகளாவிய தரத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை 4 ஆண்டு காலத்துக்குள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏவுதளத்தை நிறுவுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான மொத்த நிதித்தேவை ரூ.3,984.86 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment