இந்த செயலிக்கு ரூ.85 கோடி அபராதம் - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 1 يناير 2025

இந்த செயலிக்கு ரூ.85 கோடி அபராதம்

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். 


அதேசமயம் பயனர்களின் தனியுரிமையை மீறுவதாக கூறி இந்த செயலிக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த நவம்பர் மாதம் டிக்-டாக் சவாலில் பங்கேற்ற 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் செயலியின் பயன்பாடுகளை கண்காணிக்கவும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதிநிதியை நியமிக்க டிக்-டாக் நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பைட் டான்ஸ் நிறுவனம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து டிக்-டாக் நிறுவனத்துக்கு சுமார் ரூ.85 கோடி அபராதம் விதித்து வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை செலுத்த 10 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق