9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள் வழங்குதல் - செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Monday, 6 January 2025

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள் வழங்குதல் - செயல்முறைகள்

பொருள்: 

தமிழ்நாடு,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் திருமதி.மா. ஆர்த்தி, இ.ஆப. ந.க.எண்:1292/ஆ2/நா.மு35/ஓபக/2024, நாள்: 06.01.2025 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உயர்கல்வி வழிகாட்டி . 2024. 2025ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் - 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள் வழங்குதல் - சார்ந்து 

 பார்வை: 

1. இவ்வலுவலக கடித எண் :1292/ஆ2/நா.மு14/ஒபக/2024, நாள்: 26.07.2024 

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண் 023758/ எம்1/ இ3/ 2024, நாள் : 09122024 

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பார்வை 1 - ல் காணும் கடிதத்தின் படி, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது. வகுப்பு 9ஆம் வகுப்பு தேதி 08.01.2025 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 22.01.2025 10.01.2025 24.01.2025 08.01.2025 22.01.2025 10.01.2025 12 ஆம் வகுப்பு 24.01.2025 செயல்பாடுகள் Shipping, Maritime & Transport Engineering Public Administration, Social Sciences, International Affairs Construction, Architecture and Planning Public Administration, Social Sciences, International Affairs Overview of AYUSH Courses பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கான வழிமுறைகள் Humanities and Commerce VISCOM Course Eligibility and Opportunities எனவே பார்வை-1ல் கூறப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றவும் மற்றும் பார்வை- 2-ல் கூறியுள்ளபடி கீழ்காணும் செயல்முறைகளை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடைமுறைப் படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தலைமை ஆசிரியர்களால் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட ஏற்கனவே மாவட்ட அளவில் பயிற்சி பெற்று வரும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியின் அனைத்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களும் மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவில் எடுத்துக் கொண்ட பயிற்சியினை தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்க வேண்டும். 2. தலைமை ஆசிரியர்களால் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்ட அனைத்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வாரியான வகுப்பு ஆசிரியர்களும் ஜனவரி மாததிற்கை கொடுக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகளை மாணவர்களுக்கு அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பாட வேளையில் மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். 

3. மேலும் மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதனை ஊக்குவிக்கும் விதமாக என்னென்ன உயர்கல்வி பயிலலாம், அதற்கு என்ன பாடங்களைத் தெரிவு செய்யவேண்டும் என்பதனை, நான் முதல்வன் இணையத்தளத்தில் (https://naanmudhalvan.tnschools.gov.in) உள்ள உயற்கல்வி குறித்த காணொளிகள் மற்றும் மாதந்தோறும் உபர்கல்வி வழிகாட்டி சார்ந்து மாநில திட்ட இயக்ககத்திலிருந்து பகிரப்படும் இணைய உள்ளடக்கங்களையும் வகுப்பாசிரியர்கள் அந்தந்த வகுப்புகளிலே ஒளிபடக்காட்டி(Projectors), திறன் பலகை (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் (Hi-tech labs) வாயிலாகவும் மாணவர்களுக்கு திரையிட்டு கதை வாயிலாக எடுத்துரைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 4. மேலும், தினந்தோறும் நடைபெறும் காலை வணக்கக் கூட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி சார்ந்த கருத்துகளை மாணவர்கள் சிந்திக்க தூண்டும் வகையிலும் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும்  தலைமை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அவர்களிடையே பகிர்ந்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்புகள்: 

ஜனவரிமாதத்திற்குரிய உயர்கல்வி வழிகாட்டி பாடத்திட்டங்கள் (9 முதல் 12 ஆம் வகுப்புகள்) 

பெறுநர்: 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

நகல்: 1. செயலாளர்,பள்ளிக் கல்வித் துறை,சென்னை மாநிலத் திட்ட இயக்குநருக்காக 2. செயலாளர், ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை,சென்னை. 3. முதன்மை செயலாளர்,சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை,சென்னை. 4. முதன்மை செயலாளர்,பிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை, சென்னை. 5. செயலாளர் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை,சென்னை. 6. இயக்குநர்,பள்ளிக் கல்வித் துறை, பேராசிரியர் அன்பழகன் வளாகம், சென்னை -06. 7. அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் (அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) (முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக)







No comments:

Post a Comment