9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் படிப்புகளுக்கான நெறிமுறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 29 January 2025

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் படிப்புகளுக்கான நெறிமுறைகள்

தமிழ் நாடு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் திருமதி.மா. ஆர்த்தி, இ.ஆ.ப ந.க.எண்:1292/ஆ2/நா.மு-38/ஒபக/2024, நாள் : 2901.2025 பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி . நான் முதல்வன் திட்டம் - 2024 - 2025 ஆம் கல்வியாண்டு-அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் படிப்புகளுக்கான நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அனைத்து அர: உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக. மாணவர்கள் தங்கள் உயர்கல்வி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இணையவழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. பள்ளி நேரம் முடிந்த பிறகு, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களைப் பயன்படுத்தி இச்சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொள்ளலாம். எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இச்சான்றிதழ் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறும் வகையில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பொறுப்புகள்: 

இணைப்பு 2 இல் வழங்கப்பட்டுள்ள காணொளியைப் பின்பற்றி மாணவர்கள் உயர்கல்வி சார்ந்து திறன் வளர்த்துக் கொள்ளும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையவழி சான்றிதழ் படிப்பு முன்னெடுப்பினை உயர்கல்வி வழிகாட்டிக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிட வேண்டும். இணைப்பு 1இல் வழங்கப்பட்டுள்ள Google Form Link ஐ அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்கள் பூர்த்தி செய்வதனை தலைமையாசிரியர் வாயிலாக உறுதி செய்திடல் வேண்டும். தலைமை ஆசிரியர் மற்றும் உயர்கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியரின் பொறுப்புகள்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இச்சான்றிதழ் படிப்பை விருப்பமுள்ள ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதனை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் உறுதி செய்திடல் வேண்டும். 

மேலும், இச்சான்றிதழ் படிப்பினை பள்ளி நேரம் முடிந்த பிறகு இணையவழியில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்திடவும். விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கொள்வதற்கு உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்கள் வழிகாட்டிடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு 

1 இணையவழியில் சான்றிதழ் படிப்பினை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் 

2: வகுப்பு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய Google Form Link CERTIFICATE COURSE DEMO VIDEO மாநில திட்ட இயக்குநருக்காக பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

நகல் 
1 செயலர், ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, சென்னை 
2. செயலர், வனத்துறை, சென்னை 
3. செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, சென்னை 
4. செயலர், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சென்னை 5.இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-06. 
6.அனைத்து அரசுஉயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (முதன்மை கல்வி அலுவலர் வழியாக)



No comments:

Post a Comment