டிசம்பர் 2024 மாதத்திற்கான சம்பளம் வழங்கும் அதிகார ஆணை (Pay
Authorization for the month of December 2024) அனுப்புநர் பள்ளிக் கல்வித் துறை.
தலைமைச் செயலகம், GET GOD OUT-600 009. கடித எண்.efile/11298/ப.க.7(1)/2024- 1,
நாள். 31-12-2024 திருமதி.சோ.மதுமதி, இ.ஆ.ப., அரசு செயலாளர். பெறுநர் மாநில தலைமைக்
கணக்காயர், சென்னை - 18/35 (இ) முதன்மைச் செயலர்/கருவூல கணக்கு ஆணையர், சென்னை-15
(இ) அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்கள் (இ) அனைத்து சம்பளக் கணக்கு
அலுவலர்கள் (இ) சார் சம்பளக் கணக்கு அலுவலர், பெருநகர் சென்னை மாநகராட்சி
சென்னை-03. (இ) ஐயா. பொருள் பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி தற்காலிக பணியிடங்கள்- 94
தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1 தற்காலிக பணியிடங்கள்- டிசம்பர் 2024-ம் மாதத்திற்கு
ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக. பார்வை 1
அரசாணை (நிலை) எண். 358, பள்ளிக் கல்வித் துறை, நாள். 18.08.1997. 2 அரசு கடித
(நிலை) எண். 221, பள்ளிக் கல்வித் (வி.இ) துறை. நாள். 15.07.1999. 3 4 அரசாணை (2டி)
எண். 46. பள்ளிக் கல்வித் (வி.இ) துறை, நாள். 12.09.2006. அரசாணை (நிலை) எண். 69.
பள்ளிக் கல்வித் துறை, நாள். 20.03.2007. 5 அரசாணை (1டி) எண். 245, பள்ளிக் கல்வித்
(ப.க.7(1)) துறை, bdir. 10.12.2021. 6 பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்.
036847/எல்/ 7 3/2022, 56г. 03.10.2022. அரசு கடித எண்.efile/3630/u.க.7(1)/2024.
நாள்.10.05.2024 8 பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம் நக.எண்.036847/எல்/ 3/2022,
noir. 20.11.2024.
பார்வை 1 முதல் 3 வரையுள்ள அரசாணைகள் மற்றும் கடிதத்தின்படி
தோற்றுவிக்கப்பட்ட 680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-2 பணியிடங்கள். பார்வை-4-இல் கண்ட
அரசாணையின்படி தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களாக தரமுயர்த்தப்பட்டன.
மேற்கண்ட பணியிடங்களில் ஓய்வு பெற்றவர்கள் போக மீதமுள்ள 115 தொழிற்கல்வி ஆசிரியர்
நிலை-1 பணியிடங்களுக்கு பார்வை 5-இல் கண்ட அரசாணையின்படி 01.10.2021 முதல்
30.09.2022 வரை ஓராண்டிற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட
115 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களில் ஓய்வு பெற்ற 21 பணியிடங்கள் போக
மீதமுள்ள 94 பணியிடங்களுக்கு 01.10.2022 முதல் 31.12.2022 வரை 3 மாதங்களுக்கு
துறைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஊதியம் பெற
அனுமதிக்கப்பட்டது. பார்வை 7-இல் கண்ட அரசுக் கடித்தின்படி ஜூன் 2024 முதல்
நவம்பர்-2024 வரை ஆறு மாதத்திற்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வழங்கப்பட்டது.
2.
பார்வை 8-ல் காணும் கடிதத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர், மேற்கண்ட பணியிடங்களுக்கு
தொடர் நீட்டிப்புக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு.அரசின் பரிசீலனையில்
இருப்பதால், தற்போது டிசம்பர் 2024 முதல் மே-2025 வரை ஆறு மாதத்திற்கு ஊதியம்
வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார்.
3.
மேற்காண் நிலையில், அரசாணை (டி) எண். 271, நிதி (சிஎம்பிசி) துறை, நாள்.
18.08.2022-ன்படி அமைக்கப்பட்ட குழுவின் 09.02.2024-ம் நாளிட்ட கூட்ட அறிக்கையின்
அடிப்படையில், ஒருங்கிணைந்த ஒரே அரசாணையாக வெளியிட சற்று காலதாமதாகும் என்பதால்,
பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, இவ்வாணையின் இணைப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள 94 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை-1 பணியிடங்களுக்கு டிசம்பர்
2024-ம் மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதியக் கொடுப்பாணை (Pay
authorization) வழங்கி அரசு ஆணையிடுகிறது. மேற்கண்ட பணியிடங்களுக்கு டிசம்பர்
2024-ம் மாதத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய
அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில். அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும்
நிலையில், ஏற்றுக்கொண்டு ஊதியம்பெற அனுமதிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்ளப்
பணிக்கப்பட்டுள்ளேன்.
4. இக்கடிதம் நிதித்துறையின்
அ.சா.எண்.efile/11298/பக7(1)/2024, நாள்.31.12.2024-இல் பெற்ற ஒப்புதலுடன்
வெளியிடப்படுகிறது. தங்கள் நம்பிக்கையுள்ள. bkieg அரசு செயலாளருக்காக நகல் பள்ளிக்
கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம் கல்லூரி சாலை, சென்னை - 6. (இ) அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். (இ) இருப்புக் கோப்பு/ உதிரி நகல்
No comments:
Post a Comment