வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்! | Arts and science courses full of employment opportunities! - EDUNTZ

Latest

Search Here!

السبت، 18 يناير 2025

வேலைவாய்ப்புகள் நிறைந்த கலை அறிவியல் படிப்புகள்! | Arts and science courses full of employment opportunities!

பள்ளிப்படிப்பை முடித்ததும் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பாக விளங்கும் கலை அறிவியல் படிப்புகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில படிப்புகள் பற்றி பார்ப்போம். 
பி.எஸ்சி. ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் ஏவியேஷன் படிப்பில் இருக்கும் பாடங்களுடன் ஏர்கிராப்ட் டிசைன், மெயின்டனன்ஸ் என்ஜினீயரிங் ஆகியவற்றை இதில் கூடுதலாக கற்றுத்தருவார்கள். பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருப்பவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம். படிப்பை முடித்தவர்களுக்கு லைன் மெயின்டனன்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ஏர்கிராப்ட் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட், பிளானிங் ஆப் ஏர்கிராப்ட் சர்வீஸிங், கிரவுண்ட் எக்யூப்மெண்ட் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் ப்ளீட் மேனேஜ்மெண்ட், பர்ச்சேஸ், லீஸ் அண்ட் சார்ட்டர்ஸ், ஏர்போர்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன், ஹாஸ்பிட்டாலிட்டி, பேக்கேஜ் ஹேண்ட்லிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ், ப்யூல் சப்ளை மேனேஜ்மெண்ட் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல், எஸ்டேட் மேனேஜ்மெண்ட், ஏர்பீல்டு செக்யூரிட்டி ஆகிய துறைகளில் பணிகள் கிடைக்கும். 
பி.எஸ்சி. ஏவியேஷன் பி.எஸ்சி. ஏவியேஷன் என்ற மூன்று ஆண்டு கால படிப்பில், ஏர்போர்ட் ஆபரேஷன், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் வெதர், நேவிகேஷன் ஏர்போர்ட் செக்யூரிட்டி அண்ட் சேப்டி, டேஞ்சரஸ் கூட்ஸ், ப்ளைட் ஆபரேஷன்ஸ், விமானம் புறப்படுவதற்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள், இன்டெர்னல் மெக்கானிஸம் ஆப் ஏர் கிராப்ட் போன்ற பாடங்களை கற்றுத்தருவார்கள். படிப்பை முடித்தவர்களுக்கு ஏவியேஷன் செக்யூரிட்டி, கார்கோ ஹேண்ட்லிங், பைலட் இன்ஸ்ட்ரக்டர், பிளைட் ஆபரேஷன், டெஸ்ட்பாச்சர், பிளைட்/டேட்டா அனாலிசிஸ், லோட் அண்ட் ட்ரிம் பிரிவுகளில் வேலைகள் காத்திருக்கின்றன. சில கல்லூரிகளில் பி.பி.ஏ. ஏவியேஷன், எம்.பி.ஏ. ஏவியேஷன் படிப்புகளும் கற்றுத் தரப்படுகின்றன. பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம். 
பி.பி.ஏ. லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் வெளிநாடு அல்லது உள்நாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் வேலை, நீர் வழி, வான் வழி, தரை வழி என மூன்று வழிகளிலும் பொருட்களை ஏற்றி, இறக்கும் சட்ட முறைகள், வழிமுறைகள், பொருட்களின் தேவை, சரக்குகளைக் கையாளுதல் போன்றவற்றில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த துறையில் நுழைய விரும்புவோருக்கு ஏற்ற படிப்பு இது. இதில் சேர, பிளஸ்-2 வகுப்பில் வணிகம் அல்லது கணிதம் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்து, 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேனேஜ்மெண்ட் ப்ராசஸ், அக்கவுண்டிங் பார் மேனேஜர்ஸ், மேத்தமெட்டிக்ஸ் பார் மேனேஜர்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், எஸ்போர்ட் டிரேட் அண்ட் டாக்குமெண்டேஷன், இன்டர்நேஷனல் ஸ்ட்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், இ-லாஜிஸ்டிக்ஸ், ஷிப்பிங் அண்ட் போர்ட் மேனேஜ்மெண்ட், ஏர் கார்கோ லாஜிஸ்டிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட்டேஷன் வேர்ஹவுசிங் அண்ட் பிரெயிட் மேனேஜ்மெண்ட், ரீடெய்ல் சப்ளை மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். படிப்பை முடித்த பட்டதாரிகள் சரக்குகளைக் கையாளும் நிறுவனங்களில் கஸ்டமர் சர்வீஸ் மேனேஜர், வெகிக்கிள் பிளீட் மேனேஜர், டிஸ்ட்ரிபியூஷன் சென்டர் ஆபீசர், இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் ஏஜெண்ட், கார்கோ ஆபரேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், இன்வெட்டரி கண்ட்ரோல் மேனேஜர், பர்ச்சேஸிங் மேனேஜர், அகாடமிக் ஆப் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட், ப்ரெயிட் கோ ஆர்டினேட்டர் ஆகிய பணிகளில் சேரலாம். 
பி.பி.ஏ. ஏர்லைன்ஸ் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மெண்ட் விமான நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான தகுதிகளையும், திறன்களையும் வளர்ப்பதுதான் இப்படிப்பின் நோக்கம். விமான நிலையம் இயங்கும் முறைகள், பணியாளர்களை நிர்வகித்தல், மற்ற துறைகளை ஒருங்கிணைத்தல், பாதுகாப்பு மற்றும் அவசர கால நிர்வாகம், சரக்குப் போக்குவரத்து நிர்வாகம், விமான நிலைய நிர்வாகம், ஏர் டிராபிக் கண்ட்ரோல், ஏவியேஷன் நுட்பங்கள் ஆகிய முக்கிய பாடங்களை கற்றுத்தருவார்கள். அதுமட்டுமின்றி, பிறரோடு தகவல் தொடர்பு கொள்ளும் திறன், மொழித்திறன், ஆளுமைத்திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை வளர்க்கும் பாடங்களும் கற்பிக்கப்படும். விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவைகள், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் பொறுப்புமிக்க பணிகளில் சேர வாய்ப்புகள் உண்டு. பிளஸ்-2 வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காமர்ஸ் படித்திருப்பவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை உண்டு. 
 பி.எஸ்சி. பயர் இன்டஸ்ட்ரியல் சேப்டி இந்த படிப்பில் சேர, பிளஸ்-2 வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படித்திருந்தால் போதும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. படித்தவர்களும், டிப்ளமோ படித்தவர்களும் இப்படிப்பில் சேர தகுதியானவர்கள்தான். திரையரங்குகள், தீம் பார்க்குகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அபார்ட்மெண்ட்கள் என அதிகம் பேர் கூடுகின்ற இடங்களில் ‘பயர் சேப்டி’ என்பது மிகவும் முக்கியமானது. மிக உயரமான இடங்களில் வேலை செய்யும்போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீப்பிடித்தால் எளிதில் தப்பிக்கும் வழிகள், தீத்தடுப்பு உபகரணங்களையும், தீப்பிடிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதன்மையாக கற்றுத்தருவார்கள். பண்டமன்டல்ஸ் ஆப் பயர் அண்ட் சேப்டி, சேப்டி என்ஜினீயரிங், சேப்டி இன் கன்ஸ்ட்ரஷன் என்ஜினீயரிங், பயர் என்ஜினீயரிங், என்விரான்மெண்ட் அண்ட் பொல்யூஷன், சேப்டி அண்ட் லா, சேப்டி மேனேஜ்மெண்ட், சேப்டி இன் கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரிக்கல் இன்டஸ்ட்ரி, பண்டமன்டல்ஸ் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட முக்கிய பாடங்கள் கற்றுத்தரப்படும். படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் சேப்டி சூப்பர்வைசர், சேப்டி ஆபீசர், பயர் மேன், பயர் ஆபீசர், லீடிங் ஹேண்ட் பயர்மேன், அசிஸ்டண்ட் சேப்டி மேனேஜர் உள்ளிட்ட பணிகள் கிடைக்கும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق