பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகப் பணி: இந்த தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும் - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 1 يناير 2025

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகப் பணி: இந்த தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும்

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை இயக்குனர் த.மோகன் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந்தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக பணியில் எவ்வித இடையூறுமின்றி குறிப்பிட்ட தினங்களுக்குள் அனைத்து அரசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பதால், அனைத்து ரேஷன் கடைகளும் வருகிற 3-ந்தேதி மற்றும் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமைகளில்) விடுமுறை நாட்களில் இயங்க வேண்டும். 
பொங்கல் பரிசு தொகுப்பு நகர்வு செய்தல் மற்றும் டோக்கன் வினியோகம் செய்தல் பணிக்களை வருகிற 3-ந்தேதியும், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணிகளை வருகிற 10-ந் தேதியும் மேற்கொள்ள வேண்டும். மேற்காணும் 2 பணி நாட்களுக்கு ஈடுசெய்யும் விதமாக வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) மற்றும் வருகிற பிப்ரவரி 22-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق