புத்துணர்வு தரும் காபி எப்போது அருந்த வேண்டும்? - EDUNTZ

Latest

Search Here!

الأربعاء، 1 يناير 2025

புத்துணர்வு தரும் காபி எப்போது அருந்த வேண்டும்?

புத்துணர்வு தரும் காபி 
காபி அருந்தினால் தான் புத்துணர்வு வருகிறது. எந்த வேலையையும் செய்ய முடிகிறது என்று காபி பிரியர்கள் சொல்வதை கேட்கலாம். இது உண்மை தான். காபி உடலுக்கு புதிய புத்துணர்ச்சியை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் தூக்க தன்மையை உருவாக்கும் அடினோசின் என்ற ரசாயனத்தை காபி தடுத்து நிறுத்துகிறது. இதனால் தான் காபி குடித்த உடன் சோர்வு நீங்கி புத்துணர்வு வருகிறது என்கின்றன ஆய்வுகள். இது மட்டுமல்ல. காபி அருந்துவதால் உடலின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால், தீவிர உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் காபி அருந்தும் போது அவர்களின் உடல் வலிமை அதிகரித்து செயல் திறன் இயல்பை விட கூடுதலாக இருக்கும். இதுமட்டுமின்றி காபி அருந்துவது மற்றும் காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் கிரீம்களை தலைக்கு தேய்த்து வருவதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்றும், மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்பை தவிர்க்கவும் காபி உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இந்த பலன்களை எல்லாம் பெற காபியை சரியான முறையில் அருந்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர். எக்காரணம் கொண்டும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அருந்துவது கூடாது. 

தேவையான அளவு தண்ணீர் அருந்தி விட்டு சில நிமிடங்கள் கழித்து தான் காபி அருந்த வேண்டும். காபி உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதால் இதய செயலிழப்பை தடுப்பதாகவும், பக்கவாதம் உள்பட பல்வேறு தீவிர நோய்களை தடுக்கும் ஆற்றல் காபிக்கு உள்ளதாகவும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق