தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி பேசியதாவது:-
10 ஆயிரம் காலிப்பணியிடத்தை நிரப்புவது பற்றி
பேசப்பட்டுள்ளது. டி.ஆர்.பி. மூலமாக 6 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான
தேர்வு முடிந்து, நியமன தேதியை முடிவு செய்து, பணி உத்தரவை வழங்கும் நிலையில்,
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வழக்கு தொடர்ந்து விட்டனர். வரும் 21-ந் தேதி வழக்கு
விசாரணைக்கு வருகிறது. நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் படிப்படியாக
பணி நியமனம் செய்யப்படும். தற்காலிக ஆசிரியர் மூலமாக பாடங்களை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment