அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளத்தை வங்கிக் கணக்கில்
சேர்க்க வேண்டும் என ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
தமிழக அரசு 2012 மார்ச்சில் ஓவியம், உடற்கல்வி, கணினி, வாழ்க்கைக்
கல்வி என 16,500 சிறப்பாசிரியர்களை, பகுதி நேர ஆசிரியர்களாக நியமனம் செய்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற நியமனத்தில், அந்தந்த மாவட்ட
அனைவருக்கும் கல்வி இயக்க கட்டுப்பாட்டில் வட்டார வள மையங்களின் மேற்பார்வையில்
அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வாரம் மூன்று அரை
நாள்கள் வீதம் மாதம் 12 வேலை நாட்கள் பணியாற்ற மாதம் ரூ.12,500 வீதம் ஊதியம்
வழங்கப்படுகிறது. இந்த ஊதிய தொகை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக சம்பந்தப்பட்ட
பள்ளிகளில் உள்ள கிராம கல்விக் குழுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இதனை
கிராம கல்விக் குழுவின் தலைவராக பதவி வகிக்கும் ஊராட்சி தலைவர், அதன் செயலாளராக
உள்ள தலைமையாசிரியர் ஆகிய இருவரும் கையெழுத்திட்டு, வங்கியிலிருந்து ஊதியம்
பெறப்பட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு
குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில் பல்வேறு காரணங்களால் தடை ஏற்படுகிறது. எனவே
குறித்த தேதிகளில் ஊதியம் வழங்க வலியுறுத்தி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து கல்வித் துறைக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டது. இதையடுத்து கல்வித் துறை
சார்பில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான மாத ஊதியத்தை கடந்த 4 ஆண்டாக அவர்களது
வங்கி கணக்கிலே வரவு வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஜன.,2025 முதல் மீண்டும் பழைய
முறைக்கே பள்ளி கல்விதுறை சென்று பள்ளிகளின் வங்கி கணக்கிற்கு பகுதி நேர
ஆசிரியர்களின் ஊதியம் வரவு வைக்கப்பட்டு அவற்றை தலைமையாசிரியர் மூலமாக வழங்க
உள்ளனர். இதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில்
நடைமுறை சிக்கல் உள்ளது. தலைமையாசிரியர் விடுமுறையில் இருந்தால் அந்த மாதம் ஊதியம்
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எனவே பள்ளி கல்விதுறை
நிர்வாகம் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான மாத சம்பளத்தை அவர்களது வங்கி
கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment