யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு தேதி அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 16 يناير 2025

யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு தேதி அறிவிப்பு

யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு வரும் 21ம் தேதி நடக்க உள்ளது என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் விருது மற்றும் உதவிப் பேராசிரியராக நியமனம், உதவிப் பேராசிரியராக நியமனம் மற்றும் முனைவர் பட்டப்படிப்பில் சேர்க்கை, பிஎச்டி-க்கு மட்டுமான சேர்க்கை ஆகிய பதவிகளுக்கான தேர்வு இம்மாதம் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வுகளாக நடைபெற உள்ளது. 21ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 27ம் தேதி நடக்கவுள்ள தேர்வுகள் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق