கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி கல்வித் துறை அறிவுறுத்தல் - EDUNTZ

Latest

Search Here!

الجمعة، 17 يناير 2025

கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி கல்வித் துறை அறிவுறுத்தல்

கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி கல்வித் துறை அறிவுறுத்தல் 

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து கற்றல் செயல்பாடுக ளில் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் கணினி சார்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்க ளுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற் கேணி என்ற செயலியை வடிவமைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 
ஆனால், மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவர்க ளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணியாற் றும் அனைத்து ஆசிரியர்களும் கைப்பேசி, மடிக்கணினி,டேப்லெட், ஸ்மார்ட்போர்டு, கணினி ஆய்வகத்தில் மணற்கேணி செயலி அல் லது https://manarkeni.tnschools.gov.in எனும் இணையதளத்தில் காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்ட, வட்டாரக் கல்வி அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும். 
மேலும், மாணவர்களின் பெற்றோரும் இந்த செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதவிர அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கணினியு டன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பிப்ரவரி முதல் நடை பெற வேண்டும். மணற்கேணி செயலி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலி கள் வகுப்பறை செயல்பாட்டில் தொடர்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق