உதவித்தொகை வழங்குவதாக போலி அறிவிப்புகள்! பெற்றோருக்கு எச்சரிக்கை! - EDUNTZ

Latest

Search Here!

الجمعة، 24 يناير 2025

உதவித்தொகை வழங்குவதாக போலி அறிவிப்புகள்! பெற்றோருக்கு எச்சரிக்கை!

 உதவித் தொகை வழங்குவதாக போலி அறிவிப்புகள்! பெற்றோருக்கு எச்சரிக்கை  

கல்வி உதவித் தொகை குறித்து பெற்றோர், மாணவர்களுக்கு வரும் போலி தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதற்கி டையே கடந்த சில நாள்களாக மர்ம நபர்கள் சிலர் பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்றோரின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, கல்வி உதவித் தொகை குறித்து பேசுவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடி செயல்படுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, தூத்துக் குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் உள்பட பல்வேறு மாணவர்களை மர்ம நபர்கள் சிலர் தொடர்பு கொண்டு உதவித் தொகை வழங்குவதாகக் கூறி பேசிய குரல் பதிவு சமூக வலைதளங்க ளில் பரவி வருகிறது. 

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், இதே போன்ற பிரச்னை கடந்த ஆண்டு தொடக்கத்திலும் ஏற்பட்டது. அப்போது, இதுபோன்று வரும் தகவல்களை பெற்றோர், மாண வர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தோம். 

தற்போது மீண்டும் இந்தப் பிரச்னை உருவெடுத்துள்ளது. மத்திய, மாநில அர சுகள் வழங்கும் கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்த அதிகாரிக ளும் மாணவர்கள், பெற்றோரின் கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளமாட்டார்கள். 

ஆனால், கடந்த ஆண்டு சில சைபர் குற்றவாளிகள் பல்வேறு மாணவ, மாணவிகளிடம் கல்வித் துறை அதிகாரிகள் என்று கூறி வாட்ஸ்ஆப் செயலி மூலம் க்யூ ஆர் குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்ய வைத்து பணம் பறித்துள்ளனர். 

எனவே, இதுகுறித்து பெற்றோர், மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்தனர் 


ليست هناك تعليقات:

إرسال تعليق