தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய பா.ஜனதா
அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத நிலையில் சமக்ரா சிக்சா அபியான் திட்டத்தின்
கீழ் கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய நிதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக தமிழக அரசு தான் சம்பளம் வழங்கி வருகிறது.
மேலும், தமிழக அரசு பள்ளிகள ில் 2012-ம் ஆண்டு முதல் பகுதிநேர ஆசிரியர்களாக மொத்தம்
12 ஆயிரம் பேர் மாதம் ரூ.12,500 தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள்.
தொகுப்பூதிய
அடிப்படையில் பணியாற்றி வருகிற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை மனிதாபிமானத்தோடு
பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق