பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆயத்தமாக இருக்க அறிவுறுத்தல்
அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்குவதற்கு தயா
ராக இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,
ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் உயர்தர கம்ப் யூட்டர் ஆய்வகங்கள் அமைப்பதற்கு, உடு
மலை வட்டாரத்தில் 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கிராமப்பகுதி
அரசுப்பள்ளிகளில், பி.எஸ்.என்.எல்., இணைய வசதி பெறுவது பெரிதும் சவாலாக இருந்தது.
தற்போது அதற்கு மாற்று ஏற்பாடு செய்வது கொள்வதற்கும் கல்வித்துறை அறிவுரை
வழங்கியுள்ளது. மேலும், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை களுக்கான உபகரணங்களும் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இணைய வசதிகளும் வழங்கப்பட்டு, மாதம் தோறும்
அதற்கானதொகையும்கல்வித்துறையின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. துவக்கப்
பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்களும்
நிறுவப் பட உள்ளது. அதற்கான உபகரணங்களை இணைப்பதும், ஸ்மார்ட் போர்டு அமைக்கும்
பணிகள் மட் டுமே மீதமுள்ளன. நடப்பு கல்வியாண்டிற்குள் ஸ்மார்ட் வகுப்புகளை
துவங்குவதற்கு கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மார்ச் இறுதிக்குள்
துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி நிர்வாகத்தினருக்கு
தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், ஸ்மார்ட் வகுப்பறை கள் துவங்குவதற்கு பள்ளி
நிர்வாகத்தினரும் தயார்நிலையில் இருப்பதற்கு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை,
பெற்றோரும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment