பொருள் :
பள்ளிக் கல்வி -அரசுப் பள்ளிகளில்
ஆண்டு விழா நடத்துதல் - மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு - 38
மாவட்ட அரசு தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலை பள்ளிகள் ஆண்டு விழா நடத்திட
ரூ.14,60,89,000/- (ரூபாய் பதினான்கு கோடியே அறுபது இலட்சத்து எண்பத்தொன்பதாயிரம்
மட்டும்) தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கிற்கு
RTGS வாயிலாக அனுப்பி வைத்திட அனுமதி வழங்குதல் தொடர்பாக.
பார்வை :
1. மாண்புமிகு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள்
- 2023- 2024 அறிவிப்பு எண்.7
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.45428/
எம்/இ2/2023, நாள்.31.07.2023 3. அரசாணை (நிலை)எண்.223 பள்ளிக்கல்வி (ப.க.5(1) துறை
நாள் 08.10.2024.
பார்வை (1)-இல் காணும் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர் அவர்களின் மானியக் கோரிக்கையின் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
"அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில்
மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டு
விழாவினை சிறப்பாக நடத்திட பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப
ரூ.14.60.89,000 (ரூபாய் பதினான்கு கோடியே அறுபது இலட்சத்து எண்பத்தொன்பதாயிரம்
மட்டும்) பார்வை- 3ல் உள்ள அரசாணையில் நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனை
தொடர்ந்து, ரூ.14,60,89,000 (ரூபாய் பதினான்கு கோடியே அறுபது இலட்சத்து
எண்பத்தொன்பதாயிரம் மட்டும்) இணைப்பில் உள்ளவாறு அந்தந்த மாவட்டங்களுக்கு எதிரே
உள்ள தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்கிற்கு RTGS
வாயிலாக மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் தொடக்கக் கல்வி துறையின் பள்ளிகளையும்
உள்ளடக்கி ஆண்டு ' விழா கொண்டாடுவதற்காக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேற்காண் 2025 ஆம்
ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழாவினை சென்றாண்டு வழங்கப்பட்ட அறிவுரையினை பின்பற்றி
சிறப்பாக கொண்டாடிடவும் அதற்கான செலவின பயனீட்டுச் சான்றினை மாவட்டக் கல்வி
அலுவலர்(தொடக்கக் கல்வி) பெற்று தொகுப்பு அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு அணுப்பி
வைத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு:
1. பகிர்ந்தளிக்கப்படும் தொகை இணைப்பு -1Bபட்டியல். பெறுநர்: 1. மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.
2. தொடக்கக் கல்வி இயக்குநர்,
சென்னை-6. பள்ளிக் கல்வி இயக்குநரி
3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை/தொடக்கக்
கல்வி) அனைத்து மாவட்டங்கள்.
4. பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் நேர்முக உதவி
அலுவலர்,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) (பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை-6,(தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து 20.12.2024 அன்று வரவு வைக்கப்பட்ட
தொகை ரூ. 14,60,89,000 (ரூபாய் பதினான்கு கோடியே அறுபது இலட்சத்து
எண்பத்தொன்பதாயிரம் மட்டும்) இணைப்பில் காண் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின்
வங்கி கணக்கிற்கு RTGS வாயிலாக அனுப்பிட அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.)
நகல்: 1.
இவ்வியக்கக பட்டியல் பிரிவு 2. இவ்வியக்கக பட்ஜெட் பிரிவு
ليست هناك تعليقات:
إرسال تعليق