இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் மூலம் 32
ஆயிரத்து 438 குரூப்-டி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வேயில் மட்டும் 2 ஆயிரத்து 694
பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்ப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ. என சம்பந்தப்பட்ட
துறை சார்ந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-1-2025 அன்றைய தேதிப்படி 18
முதல் 36 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது
தளர்வு உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி
தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
22-2-2025 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப
நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
என்ஜினீயர்களுக்கு வேலை
பணி நிறுவனம்: இந்திய ராணுவம் காலி இடங்கள்: 381 பதவி: சார்ட் சர்வீஸ் கமிஷன்
(டெக்னிக்கல்) கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு வயது:
1-10-2025 அன்றைய தேதிப்படி ஆண்களை பொறுத்தவரை 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக
இருக்க வேண்டும். பெண்களை பொறுத்தவரை விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 35. அரசு
விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-2-2025 இணையதள முகவரி:
https://www.joinindianarmy.nic.in
வங்கியில் பணி
பணி நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலி பணி இடங்கள்: 266 பதவி பெயர்:
மண்டல அடிப்படையிலான அதிகாரி (இசட்.பி.ஓ.) கல்வி தகுதி: பட்டப்படிப்பு. வங்கி
சார்ந்த பணி அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். வயது: 30-11-2024 அன்றைய
தேதிப்படி 21 வயதுக்கு குறையாமலும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு
விதிமுறைகளின்படி 3 முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள்
உள்பட) தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு):
சென்னை, கோவை, மதுரை, திருச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-2-2025 இணையதள முகவரி:
https://www.centralbankofindia.co.in/en/recruitments பணி நிறுவனம்: யூகோ வங்கி
காலி பணி இடங்கள்: 250 பதவி பெயர்: லோக்கல் பேங்க் ஆபீசர் (எல்.பி.ஓ) கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20,
அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு
உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு
அனுமதிக்கப்படும். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மொழித்திறன் தேர்வு, நேர்காணல்
தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-2-2025 இணையதள முகவரி:
https://ucobank.com/web/guest/job-opportunities
பட்டதாரிகளுக்கு பணியிடம்
தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி) காலி பணி
இடங்கள்: 150 பதவி: இந்திய வன சேவை கல்வி தகுதி: பட்டப்படிப்பு (வேளாண்மை, வனவியல்,
பொறியியல் அல்லது கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல்,
வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல்) வயது:
1-8-2025 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அதாவது 2-8-1993-க்கு முன்போ, 1-8-2004-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு
அனுமதிக்கப்படும். தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, ஆளுமைத்திறன்
தேர்வு, நேர்காணல் முதல் நிலை தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை,
மதுரை, திருச்சி, வேலூர் மெயின் தேர்வு (தமிழ்நாடு): சென்னை விண்ணப்பிக்க கடைசி
தேதி: 11-2-2025 முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள்: 25-5-2025 இணையதள முகவரி:
https://upsc.gov.in/whats-new
No comments:
Post a Comment