தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 29 January 2025

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்ழான மனு மற்றும் மேல்முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தங்கள்-தொடர்பாக. 

பார்வை: 

1 அரசுக் கடிதம் எண்.3038/நி.சீ.3:2020-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 06.03.2020 2 3. 4. 5. அரசுக் கடிதம் எண்.17111நி.சீ.3/2021-01, மனித வள மேலாண்மைத் துறை, நாள் 14.07.2021 அரசாணை (நிலை) எண்.363, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (ஏ) துறை, நாள் 01.12.2004 அரசுக் கடிதம் எண்.5550/ஏ2/2020-1, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (ஏ) துறை, நாள் 19.022020 அரசுக் கடிதம் எண்.38193/நி.சீ.3/20211, மனித வள மேலாண்மைத் துறை, நாள் 24.01.2022 6. தமிழ்நாடு தகவல் ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம். கடிதம், நாள் 11.11.2024. பார்வையில் கண்டுள்ள கடிதங்களின்மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. 2 பார்வை ஆறில் கண்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையரது கடிதத்தில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கிணங்க, 2005ஆம் ஆண்டைய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பதாரர்களது மனுவிற்கு. உரிய தகவல் உரிய காலத்திற்குள் அளிக்க ஏதுவாக அனைத்து பொது அதிகார அமைப்பிலுள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் ஆகியோருக்கு பின்வரும் அறிவுறுத்தங்கள் வெளியிடப்படுகின்றன:. (i) தமிழ்நாடு தகவல் ஆணைய மேல்முறையீட்டு விதிகள் 2012, பத்தி எண் த.பியா]8(2)-ன்படி, ஆணைய விசாரணையின்போது, பொதுத் தகவல் அலுவலர் நேரில் ஆஜராவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலர்கள், ஆணைய விசாரணை நடைபெறும் நாளன்று தவிர்க்க இயலாத காரணங்களால் ஆஜராக இயலாத நேர்வுகளில், ஆணையத்தின் முன்னனுமதி பெற்று அவருக்கு இணையான வேறொரு அலுவலரை விசாரணையின்போது ஆஜராக அனுப்பி வைக்க வேண்டும். மாற்றாக. 

அவரது கீழ்நிலை அலுவலரை ஆஜராக தொடர்புடைய அதிகார அமைப்பு அனுப்பிவைக்கக்கூடாது. (ii) தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005. சட்டப் பிரிவு 6(1)-ன்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு, அச்சட்டப் பிரிவு 7(1)-ன்படி மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டியது பொதுத் தகவல் அலுவலரின் கடமையாகும். மாற்றாக. உதவிப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல்கள் வழங்கப்படக்கூடாது. (iii) அரசுக் கடித எண்.3038/நி.சீ.3/2020-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் 06.03.2020-ல் வெளியிடப்பட்ட துறை நாள் வழிகாட்டுதல்களின்படி மனுதாரருக்கு தகவல்களை அளிக்கும்போது, பொதுத் தகவல் அலுவலர் தனது பெயர் / பதவி / அலுவலக முகவரி. அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் குறித்த விவரங்களுடன், தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவத்திலுள்ளவாறு "Forms" என்ற மாதிரிப் (https:/www.tnsic.gov.in/maincontent_puge:.php பக்கத்தில் "Suggested format for reply - English* மற்றும் Suggested format for reply Tamil") அனைத்து பொதுத் தகவல் அலுவலர்களும் தங்களது கையொப்பத்துடன் கூடிய கடிதத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு உரிய தகவல்களை அளித்தல் வேண்டும். (iv) அரசுக் கடித எண்.17111/நி.8.3/2021-01. மனித வள மேலாண்மைத் துறை. 

நாள் 14.07.2021-இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மனுதாரர் நகல்களை பெறுவதற்கான கட்டணத்தை செலுத்தும் வழிமுறைகள் குறித்த விவரத்தை பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு அனுப்பப்படும் கடிதத்தில் தெரிவித்தல் வேண்டும். 19.02.2021-6b (v) அரசாணை (நிலை) எண்.363. பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (ஏ) துறை, நாள் 01.12.2004 மற்றும் அரசுக் கடித எண்.5550/ஏ2/2020-1, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த (ஏ) துறை, நாள் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தங்களின்படி, தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் பொதுத் தகவல் தபியா]அலுவலர்கள் கட்டாயமாக வேண்டும். அடையாள அட்டை அணிந்திருத்தல் (vi) தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட கோப்புகளை மனு பெறப்பட்ட நாள்முதல் மூன்றாண்டுகள் வரையிலும், இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை மேற்கொள்ளப்படக்கூடிய மனுக்கள் மற்றும் முக்கிய தீர்வுகள் பெறும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட கோப்புகளை மனு பெறப்பட்ட நாள்முதல் (RTI Cases attracting znd Appeal (without any remarkable decision/involving a remarkable decision) ஐந்தாண்டுகள் வரையிலும் பாதுகாத்து வைத்திருத்தல் வேண்டும். 

(vii) அரசுக் கடித எண்.38193/நி.சீ3/2021:1. மனித வள மேலாண்மைத் துறை. நாள் 24.01.2022-ல் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தங்களின்படி, மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களை கோரும்போது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும். மாறாக மனுதாரரை அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கடிதங்கள் அனுப்புவதை தவிர்த்தல் வேண்டும். (viii) தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 19(6)-ன்படி, மனுதாரரது முதல் மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு, பொதுத் தகவல் அலுவலரின் படிநிலைக்கு முதுநிலையிலுள்ள அலுவலர்கள் உரிய காலக்கெடுவிற்குள் விண்ணப்பதாரர்கள் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை தகவல் ஆணையத்தில் அளிப்பதை தவிர்க்கும்பொருட்டு காலக்கெடுவிற்குள் தீர்வு செய்திடல் வேண்டும். உரிய 3. மேற்காணும் அறிவுறுத்தங்களை, தலைமைச் செயலக துறைகள், துறை தலைமையகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து பொது அதிகார அமைப்பிலுள்ள பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment