‘சாஸ்த்ரா'வில் ஜன. 24, 25-இல் கம்பர் பேச்சுப் போட்டி தஞ்சாவூர், ஜன 19:
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழ 'கத்தில் கல்விக் கூடங்களில் கம்பர்
2025 என்கிற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள்
நடைபெறவுள்ளன இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்
திக்குறிப்பு:
சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 'கல்விக்கூடங்களில் கம்பர் என்கிறபேச்சுப்போட்டி நிகழ்வை
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் ஜன. 24, 25-ஆம் தேதிகளில்
நடத்தவுள்ளது. இப் போட்டி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாண வர்களுக்குமட்டும்
நடத்தப்படுகிறது.
இதில், 8ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி
மாணவர்களுக்கு ஜன.24ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சு போட்டியில், 'நடையில் நின்றுவர்
நாயகன்', 'கம்பர் காட்டும் அன் பும் அறனும் ஆகிய இரு தலைப்புகளில் ஏதேனும் ஒரு
தலைப் பில் 7 முதல் 8 நிமிஷம் உரையாற்ற வேண்டும்.
கல்லூரி மாணவர் களுக்கு ஜன.
25-ஆம் தேதி நடைபெறும் பேச்சு போட்டியில் கம் பர் காட்டும் ராமன்', 'கம்பர்
வழியில் அறம் தலைநிறுத்தல் ஆகிய இரு தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 8 முதல்
10 நிமிஷம் உரையாற்ற வேண்டும். இது காலிறுதி போட்டியாகும்.
ஒரு பள் ளிக்கு அல்லது கல்லூரிக்கு 2 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.
பங்கேற்கும் மாணவர்கள் ஜன. 22-ஆம் தேதிக்குள்
https://forms.gle/2stPeMG2mh73JpdL7 என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள
வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அரை இறுதிப் போட்டிகளில் பங்கு பெறலாம்.
அரை இறுதி, இறுதிப் போட்டிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும்
விவரங்களுக்கு உதவிப் பேராசிரியர் முனைவர் வே. விஜய் ஆனந்த் என்பவரை 98425-27806
என்கிற கைப்பேசி எண்ணிலோ,
kambar@sastra.ac.in என்ற மின்னஞ்சல்
முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத்தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment