இந்தாண்டு தேர்ச்சி அதிகரிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பாட வாரியாக
சிறப்பு கையேடுகள் வழங்குதல், ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு, தேர்வு நடத்தி
கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் கற்றல் கற்பித்தல், தேர்ச்சியை அதிகரிப்பது உட்பட
செயல்பாடுகளை கல்வி ஒன்றியம் வாரியாக கண்காணிக்க டி.இ.ஓ.,க்கள், மாநகராட்சி கல்வி
அலுவலர். உதவி திட்ட அலுவலர் (ஏ.பி.ஓ.,) குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு
தலைமையாசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. சி.இ.ஓ., ரேணுகா கூறியதாவது:
பள்ளிகளை 'மைக்ரோ லெவல்'
முறையில் கண்காணிக்கும் வகையில் மொத்தமுள்ள 15 கல்வி ஒன்றியங்களில் தலா 2
ஒன்றியங்களுக்கு ஒரு டி.இ.ஓ., குழு நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நானும் 2
ஒன்றியங்களை கண்காணிப்பேன். இக்குழு பள்ளிகளில் திடீர் விசிட் செய்து செயல்பாடுகளை
ஆய்வு செய்யும். பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க ஆலோசனை வழங்கும். வாரந்தோறும்
செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும். மாவட்டத்தில் பொதுத்தேர்வில் அதிகமாக தேர்ச்சி
குறைந்த 20 பள்ளிகள் கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஒன்றியம்
வாரியாக தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
என்றார்
No comments:
Post a Comment