ஆணை
'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களாக இருந்து இந்த அரசாணையின் இணைப்பில்
கொடுக்கப்பட்டுள்ள ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வுதியதாரர்களுக்கும்,
மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம
பணியமைப்பு உட்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் (Ad-hoc Pensioners of all
categories) அதாவது 01-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2.000/- பெறும்
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,
சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி
செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள்/ துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய
துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உட்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள்
அதாவது ஓய்வூதியதாரர்கள் எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும்/
பணியாளர்கள் பணியிடை மரணம் அடைந்திருந்தாலும் அவர்களின் குடும்ப
ஓய்வூதியதாரர்களுக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500/- (ரூபாய் ஐநூறு
மட்டும்) வழங்கி அரசு ஆணையிடுகிறது.
2. இவ்வாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து
'C' மற்றும் 'D' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் இந்தப் பொங்கல்
பரிசுத்தொகை, 02-01-2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து
ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.
3. 01-10-2023 வரை
பாணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள/ பணியிலிருக்கையில் இறந்துவிட்டவர்களைப்
பொருத்தவரையில், மேலே படிக்கப்பட்ட அரசாணையின்படி அவர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம்
வழங்கப்பட்டிருக்குமேயாயின், அவர்கள் இந்தப் பொங்கல் பரிசுத்தொகையை பெற தகுதியுடையவர்கள் ஆகமாட்டார்கள். இதற்காக, இந்த
ஓய்வூதியதாரர்களுக்குத் தொகை வழங்குவதற்குமுன், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து
தொகை வழங்கப்படவில்லை என்பது குறித்த சான்றிதழைப் பெறுமாறு ஓய்வூதியம் வழங்கும்
அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
4. இந்த ஆணை பின்வரும் வகையிலான
ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தாது- (அ) உலேமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப்
போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும்
சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள்; (ஆ)
பணியில் இருக்கும் பணியாளர்களுக்குப் பொருந்தக் கூடியவாறான தற்காலிக மிகை ஊதியம்
(Ad-hoc Bonus)/ சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் (Special Ad-hoc Bonus) பெறுகின்ற
கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள். (இ) '' மற்றும்
'B' பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள்,
அனைத்திந்தியப் பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு / அனைத்திந்திய
தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின்
கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உட்பட.
5.ஓய்வூதிய
முன்னோடித் திட்டத்தின் (Pension Pilot Scheme] கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் /
குடும்ப ஓய்வூதியதாரர்களைப் பொருத்தமட்டில், பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் அரசு
ஆணையிடுகிறது:- (i) அரசுச் செலவில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பணவிடை மூலம்
அனுப்பப்படுவதைப் பொருத்தமட்டில், இந்தப் பொங்கல் பரிசுத் தொகையும் அரசு செலவில்
பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும். (ii) ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியத்தை
வங்கிகள் மூலம் பெறும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களைப்
பொருத்தமட்டில், (அ) பட்டியலுக்குத் தொகை அளிக்க காசோலை / மின்னணு தீர்வை முறையினை
(ECS) பின்பற்றும் சென்னை ஓய்வூதியம் வழங்கல் அலுவலகம்.
மாவட்டக் கருவூலங்கள்
மற்றும் சார்நிலை கருவூலங்களில், காசோலைகள் வெளியிட்டு அவற்றை தொகை செலுத்தும்
சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளுக்கு அனுப்ப சென்னை ஓய்வூதியம் கூழங்கும்
அலுவலருக்கும், மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்களின் அலுவலர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. அந்தக்
காசோலைகளுடன், ஓய்வூதியதாரர்கள்/ குடும்ப ஓய்வூதியதாரர்களின் சேமிப்பு வங்கிக்
கணக்கில் தொகையை வரவு வைக்க அந்தந்த ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களின்
பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இணைத்து அனுப்ப வேண்டும். (ஆ) பட்டியலுக்கு தொகை
அளிக்க காசோலை / மின்னணு தீர்வை முறை (ECS) இல்லாத வங்கி சார்ந்த சார்
கருவூலங்களில் (Banking Sub-Treasuries) வங்கிக் கணக்கு காசோலை / வங்கி வரைவு
காசோலை எடுத்து அவற்றை ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் சேமிப்பு வங்கிக்
கணக்கில் வரவு வைப்பதற்காக சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் வங்கிக் கிளைகளுக்கு
அவற்றை அனுப்பி வைக்க சார்நிலைக் கருவூல் அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
6. மாநில தொகுப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம் வழங்குதல் குறித்த செலவு செய்யப்படு திட்ட அலுவலர்கள் பத்தி 6-00 உள்ள கணக்குத்
தலைப்பின் கீழ் இச்செலவினத்தை பற்று வைக்க வேண்டும்.
8. மேலே அனுமதிக்கப்பட்ட
பொங்கல் பரிசுத் தொகையை ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும்
முன்னாள் பணியமைப்பு அலுவலர்களுக்கு உடனடியாக பெற்று வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
9.2024-2025-ஆம் ஆண்டு ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சம்பந்தப்பட்ட
கணக்குத் தலைப்பின் கீழ் போதிய நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment