தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல்
முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி
செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு டேப்
வழங்கப்பட்டுள்ளன. துவக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அறைகள்,
நடுநிலைப்பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக்கப்பட்டு வருகிறது. கணினி சார்ந்த புதிய
அறிவியல் நுட்பங்களுடன், கற்பித்தலில் உதவி செய்ய, பள்ளிக்கல்வித்துறை சார்பில்,
மணற்கேணி எனும் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Don't have Manarkeni App?
இதில், மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 120 வீடியோக்கள் முதல்
கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான
பாடங்கள், உயர்கல்வி வழிகாட்டி வீடியோ, நீட், ஜே.இ.இ., கிளாட் போட்டித்தேர்வு
பயிற்சிக்கான வீடியோ, மாதிரி வினாத்தாள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவேற்றம்
செய்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
செயலியில் உள்ள வீடியோக்களை, மடிக்கணினி அல்லது கம்ப்யூட்டரில்
https://manarkeni.tnschools.gov.in என்ற இணைய முகவரியிலும் பதிவிறக்கம் செய்து
கொள்ள முடியும். இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து, தொடக்கக்கல்வி இயக்குனரகம்
வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து அரசு தொடக்க மற்றும்
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜன., 20 முதல், 25க்குள்,
சிறப்பு முகாம் நடத்தி, ஜன., 31க்குள், அனைத்து ஆசிரியர்களும், செயலியை பயன்படுத்த,
வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பிப்ரவரி முதல், அனைத்து
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் நடைபெறுவதை, மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق