நான்கு விதமான பதவிகளுக்கு மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் காலந்தாய்வு தொடர்பான செய்தியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 9 يناير 2025

நான்கு விதமான பதவிகளுக்கு மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் காலந்தாய்வு தொடர்பான செய்தியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 22.01.2025 முதல் 12.03.2025 வரை (06.02.2025, 07.02.2025, 18.02.2025 முதல் 21.022025 வரை & 07.03.2025 ஆகிய நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
மேற்குறிப்பிட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள் நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணை 07.02.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ச.கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப, செயலாளர்

ليست هناك تعليقات:

إرسال تعليق