இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்று பணியிலிருந்து விடுவித்தல் தொடர்பாக - மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 7 January 2025

இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்று பணியிலிருந்து விடுவித்தல் தொடர்பாக - மாநில திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம்

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. 2024 25 ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் சிறப்பு கவனம் தேவைப்படும் இடங்களில் நடைபெற்று வருகிறது. 

38 பார்வையிலுள்ள இவ்வலுவலகக் கடிதத்தின் படி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை செயல்படுத்த உறுதுணைப் புரிவதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றனர். தற்பொழுது மாணவர்கள் நலன் கருதி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை 06.01.2025 அன்று மாற்று பணியிலிருந்து விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது. 
 மாவட்ட அளவில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை செயல்படுத்த உறுதுணைப் புரிவதற்காக நன்கு ஆர்வம் ஈடுபாடு மிக்க தன்னார்வலர் ஒருவரை மாவட்டத்தில் நியமிக்க வேண்டும். 

இத்தன்னார்வலர்களுக்கு மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.12000 வழங்கப்படும். எனவே மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை மாற்று பணியிலிருந்து விடுவிக்கவும் மாவட்ட அளவில் நன்கு ஆர்வம் ஈடுபாடு மிக்க தன்னார்வலர் ஒருவரை நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  




No comments:

Post a Comment