கடந்த டிசம்பர் மாதம் நடை பெற்ற
சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப் பட்டுள்ளன. கேந்திரிய வித்யாலயா
பள்ளிகள், நவோதயா பள்ளி கள் மற்றும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் பின்பற்றப்படும் பள்ளி
களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப் படும்
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண் டியது கட்டாயம் ஆகும்.
கடந்த
டிச. 14 மற்றும் 15-ம் தேதி நாடு முழுவதும் நடந்த இத்தேர்வுக்கான உத்தேச விடைகளும்
தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும் (ஓஎம்ஆர் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்தில்
(https://ctet.nic.in) வெளியிடப்பட்டுள் ளன. உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம்
இருந்தால் உரிய ஆவணங்களுடன் ஜன. 5-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு கட்டணம் ரூ.1000-த்தை ஆன் லைனில் செலுத்தலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment