தேசிய அளவிலான தடகள போட்டியில் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை - EDUNTZ

Latest

Search Here!

الخميس، 9 يناير 2025

தேசிய அளவிலான தடகள போட்டியில் பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 68-வது தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோவை சி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.கே.தியா கலந்து கொண்டு விளையாடினார். 

இதில் அவர் 100 மீ, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 4×100 தொடர் ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

சாதனை படைத்த மாணவியை பள்ளித்தலைவர் கே.கே.ராமச்சந்திரன், பள்ளிச்செயலாளர் கே.ராஜகோபாலன் மற்றும் பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் பி.எஸ்.ஸ்ரீப்ரியா, துணை முதல்வர் ஈ.சி.சாபு, ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிேயார் பாராட்டினர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق