குறிப்பு: தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் இரண்டு முக்கியமான தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்!
குடும்ப உறுப்பினர் (அ)
நெருங்கிய உறவினர் என்பது
தந்தை அல்லது தாய், மாற்றாந்தாய் அல்லது மாற்று தந்தை, கணவன் அல்லது மனைவி, சகோதரன்
அல்லது சகோதரி, மாமனார் அல்லது மாமியார், சகோதரனின் மனைவி அல்லது சகோதரியின் கணவன்
மற்றும் மகளின் கணவன் அல்லது மகனின் மனைவி ஆகியோர் அரசு ஊழியரின் நெருங்கிய
உறுப்பினராகக் கருதப்படுவார்.
(ஆ) கணவன் அல்லது மனைவி நீதிமன்றத்தின் தீர்ப்பால்
பிரிக்கப்பட்டாலொழிய அவர் தனியாக வாழ்ந்தாலும் குடும்ப உறுப்பினராகவேக்
கருதப்படுவார். (விதி 2(5) (i)
(இ) அரசு ஊழியரை முழுவதுமாக சார்ந்துள்ள மகன்/மகள்,
மாற்றாந்தாய் மகன்/மகள் குடும்ப உறுப்பினராவார். அரசு ஊழியைைர சாராத மகன்/மகள்.
அரசு ஊழியரின் பொறுப்பிலிருந்து விடுபட்ட ஒரு குழந்தை ஆகியோர் குடும்ப
அங்கத்தினராகக் கருதப்பட மாட்டார்கள். (விதி 2(5) (ii)
அசையும் சொத்து
(அ)
ரூ.15000க்கு அதிகமானால் அசையும் சொத்து ஒன்றினை வாங்குவதற்கும். விற்பதற்கும்
எவ்வித அனுமதியும் தேவையில்லை. (அரசாணை எண் 225, பணியாளர் நாள் 11.9.1998) அசையும்
சொத்து வாங்கிய நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் துறைத் தலைவருக்கு ஒரு அறிவிப்பு
மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். (அரசு கடித எண் 12133/ஏ-1/89-1 பொ.ப.து, நாள்
18.5.89)
(ஆ) 25.7.90 முதல் வங்கிகள் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் நகை
அடகு வைத்தால் துறைத்தலைவருக்கு தெரிவிக்கத் தேவையில்லை (அரசாணை எண் 336ரகக் துறை
நாள் 25.7.94)
No comments:
Post a Comment