மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் - கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 2 January 2025

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் - கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.049174/டபிள்யு2/இ3/2023 நாள்.19.12.2024 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.049174/டபிள்யு2/இ3/2023 நாள். 19.12.2024 
பொருள்: 

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 2024-25b கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் - கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் - சார்பு. 

பார்வை: 

1)சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்ந்த கருத்துருக்கள் 2) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.049174/டபிள்யு2/இ3/2023 நாள்: 28.10.2024 
தமிழ்நாட்டிலுள்ள அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில், ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post Without Person) 24 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரண் செய்யப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு பார்வை 2ல் காண் செயல்முறைகள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டது. 
கல்வி அவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் (Surplus without person) பணியிடங்களை 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 24 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு ( ஆங்கிலம்-2, கணிதம் - 06, வேதியியல் -04, தாவரவியல்-03, வணிகவியல் -09) அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் (Scale Register) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 
இணைப்பு - அனுமதிக்கப்பட்ட 24 கூடுதல் பணியிட விவரம் பள்ளிக் கல்வி இயக்குந 14-12-24 பெறுநர் சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) நகல்:சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் (சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக)





No comments:

Post a Comment