இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 29 January 2025

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை - தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

பார்வை: 

சார்நிலைப்பணி இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது - குழுவின் நான்காவது கூட்டம் 04.02.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ள தகவல் தெரிவித்தல்-சார்பாக. 

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 0106.2009க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஊதியம் கோரும் ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 9-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி நான்காவது கூட்டம் 04.02.2025 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 10ல் காணும் 08.01.2025 நாளிட்ட அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது. அரசுக் கடிதத்தில் தெரிவித்துள்ளதற்கிணங்க சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக மேற்கண்டுள்ள குழுவின் தலைவர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்கள் தலைமையில், பார்வை 10-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி, 04.02.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி, நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஐந்து சங்கங்களின் கொள்ள பிரதிநிதிகள் கலந்து அழைக்கப்படுகிறார்கள். 

மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரு பிரதிநிதிகளுக்கு மிகாமல் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment