தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி - EDUNTZ

Latest

Search Here!

الاثنين، 13 يناير 2025

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண் : 14257 / கே2 / 2023 

பொருள்: 

தொடக்கக் கல்வி நாள்: 13.01.2025. 2023-2024ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் - அறிவிப்பு எண்.8 - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் - மதுரை மாவட்டம், நாகமலைப் புதுக்கோட்டை, பில்லர் வளாகத்தில் 54-64 தொகுதிகளுக்கு பயிற்சி நடைபெறுதல் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை பயிற்சியில் பங்கு கொள்ள அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக, 
பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின்படி நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அக்டோபர் 2023 முதல் 53 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது 2024-25ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியானது 23.01.2025 முதல் 05.03.2025 வரை 11 தொகுதிகளாக இணைப்பில் கண்டுள்ளபடி அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது. எனவே, மேற்படி பயிற்சிக்கு இணைப்பு-1ல் இடம்பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு-2ல் இடம்பெற்றுள்ள கருத்தாளர்கள் (வட்டாரக் கல்வி அலுவலர்கள்) அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் நடைபெறும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்வதற்கு தேவையான அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவதோடு, குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் / கருத்தாளர் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இப்பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். 

1) இணைப்பில் கண்டுள்ளவாறு தொகுதிவாரியாக (Batch-wise) நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டின்படி பயிற்சி தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இரவு 8.30 மணிக்குள்ளாகவோ அல்லது பயிற்சி தொடங்கும் நாளன்று காலை 6.00 மணி முதல் 8.00 மணிக்குள்ளாகவோ பயிற்சி மையத்திற்கு வருகை புரிய வேண்டும். 

2) பயிற்சியில் கலந்து கொள்ளும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தங்கும் இடவசதி மற்றும் உணவு வசதி ஆகியன ஏற்பாடு செய்து தரப்படும். 

3) பயிற்சி தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவு 9.00 மணி வரை மட்டுமே இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். 

4) பயிற்சி நடைபெறும் நாட்களில் பயிற்சி மையத்தை விட்டு வெளியே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் பில்லர் மையத்தில் இரவு 9.00 மணியிலிருந்து காலை 6.00 மணி வரை யாரும் உள்ளே வரவோ அல்லது வெளியே செல்லவோ அனுமதி கிடையாது. 

5) நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூன்று நாட்கள் பயிற்சி நிறைவடைந்த பிறகு மாலை 7.00 மணிக்கு பின்னரே பயிற்சி வளாகத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படுவர். 

6) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி நாட்களுக்கு மாற்றாக வேறு நாட்களில் பயிற்சியில் பங்கேற்க, ஒரு தலைமை ஆசிரியருக்கு மாற்றாக மற்றொரு தலைமை ஆசிரியர் பங்கேற்க அனுமதி கேட்கப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி உரிய தலைமை ஆசிரியர்கள்பயிற்சியில் பங்கேற்பதை மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) உறுதி செய்திட வேண்டும். 
7) பயிற்சியில் கலந்து கொள்ள வரும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் (Bank pass book first page: account detail le A/c No, IFSC number, Branch name, etc..). மற்றும் பயணச்சீட்டு நகல் (Travel ticket copy) ஆகியவற்றை தங்களுடன் எடுத்து வர வேண்டும்.


ليست هناك تعليقات:

إرسال تعليق