தமிழ் இலக்கியங்களும் பொங்கல் பண்டிகையும்...!
பண்டைய சோழர் துறைமுகமான
பூம்புகாரில் பொங்கல் ‘இந்திர விழா’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக வரலாற்று
ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில அறிஞர்கள், பொங்கல் என்பது ‘தைநிரலிடல்’ என்று
அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் பழங்கால விழாவுடன் தொடர்புடையது என்ற கருத்தும்
உள்ளது.
பொதுவாக, முந்தைய காலங்களில் பொங்கலுக்கு முன்பு இளம் பெண்கள், மழை மற்றும்
செழிப்பான அறுவடை கிடைக்க இயற்கையை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை
தை தொடங்கும் நாளில் முடித்துக் கொள்வார்கள். இந்த நாள்தான் பொங்கல் என்று
கொண்டாடப்படுகிறது என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். ஆண்டு முழுவதும் வயல்களில்
கடினமாக உழைத்து அந்த உழைப்புக்கு பிறகு, அதன் பலனைக்காண சமூகம் ஆயத்தமாவதை காணும்
மாதமாக தை மாதம் இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் பொங்கல். இந்த பொங்கல் பண்டிகை
நாளில் ‘புளுகல்’ என்ற உணவு தயார் செய்வது பற்றி குறிப்பு உள்ளதாக அறிஞர்கள்
கூறுகின்றனர்.
இதுவே பின்னாளில் பொங்கல் ஆக மருவியதாகவும் கருதுகின்றனர்.
சோழர்களின் ஆட்சியின் போது, ‘புதியீடு’ என்று அழைக்கப்பட்ட அரிசியை வேகவைத்து
அறுவடைக் காலத்தைக் கொண்டாடும் ஒரு திருவிழா இருந்தது என்பதற்கு சான்றுகள் உள்ளன.
பழங்கால தமிழ் இலக்கியமான சீவக சிந்தாமணியில்தான் ‘பொங்கல்’ என்ற வார்த்தையின்
நேரடிக் குறிப்புகள் காணப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொங்கல்
பண்டிகையில் சூரியனுக்கும், நிலத்தில் உழைத்த காளைகளுக்கும் நன்றி
செலுத்தப்படுகிறது. மாட்டுப்பொங்கல் நாளில் காளைகளுடன் விளையாடும் ஏறு தழுவுதல்
நிகழ்த்தப்படுகிறது. இந்த விளையாட்டுப் பாரம்பரியம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான
தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.
No comments:
Post a Comment