பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்த தகவல் தொகுப்பு | A comprehensive information package for those about to retire from work. - EDUNTZ

Latest

Search Here!

السبت، 18 يناير 2025

பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்த தகவல் தொகுப்பு | A comprehensive information package for those about to retire from work.

நண்பர்களே வணக்கம் 🙏 
பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள்...

 சிறிய தகவல் தொகுப்பு ..
அரசாணைகள்...
மாதிரி கடிதங்கள்... மற்றும் செயல்முறைகளுடன்..

தகவலுக்காக.

க.செல்வக்குமார் 
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம் 🙏 
பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்த தகவல் தொகுப்பு சார்ந்த பதிவு. 

அ) பொதுவான பதிவுகள் 

1) ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற இருப்பவர்கள் இந்த மாதத்திலேயே 12 CL எடுத்துக் கொள்ளலாம். 

2) மறு-நியமனம் பெற உள்ள ஆசிரியர்கள் மறுநியமன காலத்திற்கு மாதத்திற்கு ஒரு தற்செயல்விடுப்பு அனுமதி உண்டு. (பணிக்காலம் . மறுநியமன காலம் மொத்தம் ஆண்டிற்கு 12 தற்செயல்விடுப்பு மிககூடாது). 
3) ஓய்வு பெறுவதற்கு முன் MI/ EL/ UEL(PA) எல்லாம் அனுமதி உண்டு. மறு நியமன காலத்தில் ஒரு நாள் தற்செயல்விடுப்பு தவிர எந்த ஒரு விடுப்பும் அனுமதி இல்லை(கட்டாயம் தேவை எனில் LOP தான். 
4) தனியரின் பிறந்த தேதி 2 ஆம் தேதி முதல் மாதக் கடைசி வரையில் எனில் ஓய்வு பெறும் நாள் அந்த மாதத்தின் கடைசி நாள். எ.கா பிறந்த நாள் 3.5.1965 எனில் ஓய்வு 31-5-2025 
5) ஒன்றாம் தேதி பிறந்த நாள் எனில், முந்தைய மாதத்தின் கடைசி நாள் தான அன்னாரின் ஓய்வு பெறும் நாள் எ.கா 01.03.1965 பிறந்த நாள் எனில் ஓய்வு 28.02.2025 
6) CPS (14.2003 பின் நியமனம்) பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் (CPS/EL/U.E.L/SPF2000) அன்னார் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் துவங்கிட/வழங்க இயலும். 
7) GPF பணியாளர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற நான்கு மாதங்களுக்கு முன் GPF பிடித்தம் நிறுத்தப்பட்ட உடன் கருத்துருக்கள் ஆன்லைன் (OPPAS) வழியாக அனுப்பிட இயலும். 

ஆ) ஓய்வு பெற நான்கு மாதங்கள் உள்ள நிலையில் செய்ய வேண்டியவை. 

தற்போது CIPS GPF பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் பெற கருத்துருக்கள் ஆன்லைன் வழியாகத் தான் அனுப்பப்படுகிறது. 

ESR Part I and Part II update ஆக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெயர், பிறந்த தேதி, பணி ஏற்பு நாள், CPS/ GPF எண் சரியாக இருக்க வேண்டும். 

தங்களின் புரிதலுக்கு ESR Part I என்பது. IFHRMS வந்த புதிதில் நமது விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டது பணித் பதிவேட்டில் D என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். 

31-12-2021 வரை தகவல்கள் அதில் இருக்கும். Profile page எனப்படும் SR front page தகவல்கள் சரி செய்ய Ticket Id தான் போட வேண்டும். பிற தகவல்களை நாமே சரி செய்து கொள்ளலாம் 

How to Download e SR part I. 
IFHRMS Individual Login ... 
Other Application... 
Click Part I e SR...

ليست هناك تعليقات:

إرسال تعليق