அனுப்புநர்
பள்ளிக்கல்வித் துறை, தலைமை செயலகம், சென்னை-600 009. கடித (efile)
எண்.11834/பக5(1)/2024-1, நாள். 13.01.2025 திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப., அரசு
செயலாளர்.
பெறுநர்
அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள் / சார் கருவூல அலுவலர்கள்.
சம்பளக் கணக்கு அலுவலர்கள், சென்னை-01 / 08 / 35. சம்பந்தப்பட்ட சம்பளக் கணக்கு
அலுவலர்கள். ஐயா, பொருள்: பள்ளிக்கல்வி 2009-2010 மற்றும் 2011-2012-ஆம் ஆண்டுகளில்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் 2064 பட்டதாரி ஆசிரியர்கள், 344
உடற்கல்வி ஆசிரியர்கள், 544 ஆய்வக உதவியாளர்கள் மற்றும் 344 இளநிலை உதவியாளர்கள் ஆக
மொத்தம் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது -
இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் 30.11.2024 வரை ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டது
01.12.2024 முதல் 31.01.2025 வரை 2 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பானை (Pay
Authorization) வழங்குதல் - தொடர்பாக.
பார்வை: -
1. அரசாணை (நிலை)எண்.46, பள்ளிக்
கல்வித்(சி2)துறை, நாள்.01.03.2011.
2. அரசாணை (நிலை) எண்.67.பள்ளிக் கல்வித் (சி2)
துறை, நாள்.16.03.2012 3.அரசாணை (1டி) எண். 101, பள்ளிக்கல்வித் 5(1)துறை.
நாள்.20.07.2021. 4.பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம் ந.க.எண்.000688/எல்/ இ3/2021,
நாள் 22.04.2024. 5.அரசு கடிதம் (efile).எண்.4872/ப.க5(1)/2024. நாள்.30.05.2024.
6. அரசு கடித (efile) எண்:9003/பக5(1)/2024, நாள்.09.10.2024.
7. பள்ளிக்கல்வி
இயக்குநர் கடிதம் ந.க.எண்.000688/எல்/ 3/2021, .25.11.2024.
பார்வை 1 மற்றும் 2-இல்
காணும் அரசாணைகளில் 2009-2010 மற்றும் 2011-2012 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, அரசு / நகராட்சி / மாநகராட்சி /
நலத்துறை நடுநிலைப் பள்ளிகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ்
2064 544 ஆய்வக பட்டதாரி ஆசிரியர்கள், 344 உடற்கல்வி ஆசிரியர்கள், உதவியாளர்கள்
மற்றும் 344 இளநிலை உதவியாளர்கள் ஆக மொத்தம் 3296 தற்காலிக பணியிடங்கள்
தோற்றுவிக்கப்பட்டது.
2. பார்வை 3-ல் காணும் அரசாணையில் மேற்காணும் 3296 ஆசிரியர்
மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 01.03.2021 முதல் 29.02.2024 வரை தற்காலிக
தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பார்வை 4-ல் காணும்
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மூலம் இப்பணியிடங்களுக்கு 01.03.2024 முதல்
31.05.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பாணை (Express Pay Order)
வழங்கப்பட்டது.
3. பார்வை 5 மற்றும் 6-இல் காணும் அரசு கடிதத்தில் மேற்காணும் 3296
தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 01.06.2024 முதல்
30.11.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவடைந்த நிலையில்.
இப்பணியிடங்களுக்கு 01.12.2024 முதல் 31.05.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு
ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறும் பள்ளிக் கல்வி இயக்குநர்
அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு
கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியர்
அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.12.2024 முதல் 31.01.2025 வரை 2 மாதங்களுக்கு
ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது.
மேற்படி அலுவலர்களுக்கான 01.12.2024 முதல் 31.01.2025 முடிய 2 மாதங்களுக்கான
சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால்
சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில்,
ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மின்கோப்பு
எண்.11834/ப.க5(1)/2024,
5.இக்கடிதம். இத்துறையின் நாள்.11.01.2025-இல்
நிதித்துறையிடம் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. நகல் பள்ளிக்கல்வி
இயக்குநர், சென்னை-6 மாநிலக் கணக்காயர், சென்னை-18/35. நிதி(கல்வி-II)துறை,
சென்னை-9. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். தங்கள் நம்பிக்ளையுள்ள, அரசு
செயலாளருக்காக. 14-42 131162005
ليست هناك تعليقات:
إرسال تعليق